வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களை (BJP Alliance Leaders) சந்திக்கப் போவதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்
தொடரும் போராட்டம் (Protest Continue)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி கடந்த 25 நாட்களாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி (Negotiation failed)
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும், மத்திய அரசு மட்டும் செவி மடுக்க மறுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசுடன் நடைபெற்ற 6 கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
உண்ணாவிரதப் போராட்டம் (The hunger strike)
இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதமாக திங்கள் கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தங்களது அடுத்தக் கட்ட முடிவு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயசங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், வேளாண் சட்டத்தை திரும்ப பெறுமாறு வலியுறுத்த ஏதுவாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை அடுத்த வாரம் நேரில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதன் மூலம் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற பாஜாகவுக் நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!
Share your comments