பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர்,
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், பால் உற்பத்தி யாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
2.பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் வழங்கும் இலவச பயிற்சி
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் மார்ச் மாத இலவச பயிற்சி வழங்குகிறது. இன்று தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. வருகிற மார்ச் 21 காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில்நுட்பம், வருகிற 24 சிப்பி காளாண் பண்ணை நேர்காணலும் உள்ளது. எனவே, விருப்புமுள்ளோர் 9488575716 என்ற தொலைபேசியை தொடர்புக்கொள்ளவும்.
3.கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் வழங்கும் கறவை மாடு மற்றும் நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி
வருகிற 21 மார்ச் 2023 - கறவை மாடு வளர்ப்பு பயிற்சி, மற்றும் 28 மார்ச் 2023 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி , பற்றிய இலவச பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249/ 9487813812 எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். இத்தகவலை பகிர்வோர், உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்.
4.ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரசி வழங்கப்படும்
பிரதமர் மோடி தனது 75-ஆவது சுதந்திர தின உரையில் மக்களிடையே காணப்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு சார்பில் பொது விநியோக திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் (NFSA) பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (PHH) மற்றும் அந்தியோதிய அன்னயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பாக நியாயவிலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரசி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
மேலும் படிக்க:
ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் இதை வாங்க மறக்காதீங்க.. மாவட்ட ஆட்சியர் தகவல்
5.மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
திருநெல்வேலி திசையன்விளை: தூண்டில் வளைவு அமைக்கக்கோரி உவரி அருகே கூடுதாழையில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை மீனவ கிராமத்தில் கடந்த 10-ந் தேதி திடீரென கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 30 மீட்டர் தூரம் வரை கடல்நீர் ஊருக்குள் புகுந்து, அங்கு நின்ற மின்கம்பமும் சாய்ந்தது. கடற்கரையில் சுமார் 10 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டதால் படகுகளை நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்து அங்கு தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடந்த 11-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 6 வது நாள் போராட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் அருணா டென்சிங் தலைமையில் கிராம மக்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கருப்பு கொடிகளை ஏந்தியபடி கடற்கரைக்கு சென்றனர். தொடர்ந்து கடலில் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6.விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த கோரிக்கை
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் (AIVTS) தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்களுக்கான தினக்கூலியை நாளொன்றுக்கு ரூபாய் 445.60காசுகளிலிருந்து ரூபாய் 600 ஆக உயர்த்த வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவரும் கந்தர்வகோட்டை எம்எல்ஏவுமான எம்.சின்னத்துரை தலைமையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அமைப்பினர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
7.காரீஃப் உற்பத்திக்கு ஏற்ற 14 பூண்டு வகைகளை அரசு அடையாளம் கண்டுள்ளது
வெவ்வேறு வேளாண் காலநிலை நிலைமைகளின் கீழ் சாகுபடி செய்ய 14 வகையான பூண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது. ராபி பருவ பூண்டை காரீஃப் பயிர் சுழற்சிக்கு ஏற்றதாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பல்வேறு பருவங்களில் சாகுபடி செய்ய ஏற்ற வகைகளை அடையாளம் காண்டுள்ளதாகவும், இவ் ஆராய்ச்சி இந்தியாவில் வேளாண் காலநிலை நிலைமைகள் ICAR - வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி இயக்குநரகம், புனே மற்றும் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை, நாசிக் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்தார். இந்த பூண்டு வகைகளில், ‘பீமா பர்ப்பிள்’ மற்றும் ‘ஜி282’ ஆகியவை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (ஊட்டி) ஆகிய இடங்களில் காரீஃப் காலத்தில் சாகுபடி செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
வெவ்வேறு காலநிலைகளில் சாகுபடி செய்ய 14 வகையான பூண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது- வேளாண் அமைச்சர் தகவல்
தென்னையில் காண்டாமிருக வண்டு - ஒருங்கிணைந்த தடுப்பு முறை
Share your comments