விவசாயிகள் இரட்டிப்பு லாபம் பார்ப்பதில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க முடியும்.
மேலும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வது முதன்மை பயிருக்கு பாதுகாப்பு அரணாகவும், நோய் பூச்சித் தாக்குதலை தடுத்தும் விடுகிறது. ஊடுபயிர் சாகுபடி மூலம் மண் வளம் பெருகி, நுண்கிருமிகள் மூலம் மண்ணிற்கு தேவையான அங்ககச் சத்தை அதிகரிக்க செய்யலாம். ஆனால், அதே நேரத்தில் முதன்மை பயிருடன் எவ்விதமான பயிரை ஊடுபயிராக சாகுபடி மேற்கொள்ள இருக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம்.
தக்காளி நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அன்றாட உணவுப்பொருட்களில் ஒன்று. இந்நிலையில், தக்காளி பயிருடன் எதனை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்? அதனால் ஏற்படும் நன்மை என்ன? என்பது குறித்து வேளாண் ஆலோசகர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை உள்ளடக்கியுள்ளது இக்கட்டுரை. தக்காளியுடன் ஊடுபயிராக சாகுபடி மேற்கொள்ள ஏற்ற சில தாவரங்களின் பட்டியல் பின்வருமாறு-
வெங்காயம், பூண்டு: வெங்காயம், பூண்டு போன்றவற்றின் வாசனை, தக்காளியின் வாசனையை விட அதீதமாக உள்ளது. இதனா தக்காளியை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றலாம்.
துளசி- துளசி ஒரு சுவையான மணம் கொண்ட மூலிகையாகும். இது ஈ மற்றும் அசுவினிகளை விரட்டுகிறது, அதே நேரத்தில் சில நறுமண கலவைகளை வெளியிடுவதன் மூலம் தக்காளியின் சுவையை மேம்படுத்துகிறது. துளசி செடிக்கு பராமரிப்பில் குறைவாகவே தேவைப்படும் மற்றும் தக்காளியை தாக்கும் கொம்பு புழுக்களை விரட்டுகிறது. இருப்பினும், துளசி செடி மிகவும் புதர் மற்றும் உயரமாக வளரும் தன்மைக் கொண்டவை. இதனால் தக்காளி செடிக்கு காற்றோட்டம் குறைகிறது மற்றும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சூரியகாந்தி : சூரியகாந்தியானது தேனீக்கள் மற்றும் பறவைகளை ஈர்க்கும் என்பதால் அவை சிறந்த ஊடுபயிராக விளங்க வாய்ப்புள்ளது. சூரியகாந்தி பூக்கள் இருக்கும் தோட்டத்திற்கு வரும் தேனீக்களானது அப்பகுதியில் உள்ள தக்காளி பூக்களில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது. கோடையின் பிற்பகுதியில், சூரியகாந்தி பறவைகளை ஈர்க்கிறது, அவை பருவத்தின் பிற்பகுதியில் தக்காளியை பாதிக்கும் சில பூச்சி பூச்சிகளை உண்ணலாம்.
முள்ளங்கி: இளம் தக்காளி செடிகளை உதிர்க்கும் வண்டுகளை முள்ளங்கி ஈர்க்கும். முள்ளங்கிகள் ஆழமற்ற மண்ணில் வளரும் மற்றும் தக்காளி வேர்களில் தலையிடாது. எனவே அவற்றை தக்காளி செடியின் அடிப்பகுதியில் வைக்கவும்.
பீர்க்கங்காய்: தமிழகத்தில் தக்காளியுடன் ஊடுபயிராக பீர்க்கங்காய் நடுவது வழக்கமாக உள்ளது. 45 நாட்களுக்குள் பீர்க்கங்காய் அறுவடைக்கு தயாராகிவிடும் என்பதால் விவசாயிகளுக்கு பராமரிப்பு செலவு குறைவாக உள்ளது.
தக்காளி நடும் போதே, பீர்க்கங்காய் விதைகளை நட்டு- கொடி வளரும் நிலையில் குச்சி கட்டி விடுகின்றனர். ஒரே நேரத்தில் இரு பயிர்களையும் பராமரிப்பதால் விவசாயிகளுக்கு நேரம் மிச்சமாவதோடு, லாபமும் சந்தை நிலவரங்களை பொறுத்து கிடைக்கிறது.
தக்காளி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வருடந்தோறும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். ஊடுபயிர் மேற்கொள்ளுவது ஏதேனும் ஒரு வகையில் நஷ்டத்தை சமாளிக்க உதவும் என்பதால், தக்காளி விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை அலுவலரை தொடர்புக் கொண்டு ஊடுபயிர் குறித்து முழுமையான விளக்கத்தினை பெறுங்கள்.
இதையும் காண்க:
உட்கார்ந்த இடத்தில் நில அளவைக்கு விண்ணப்பிக்கலாம்- சூப்பர் அறிவிப்பு
திருவண்ணாமலை கிரிவலம்- பக்தர்களுக்கு இலவச மினி பேருந்து சேவை
Share your comments