வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை (Very heavy rain)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னையில் ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் இன்னும் மழைநீர் வடியவில்லை.
இதனை வெளியேற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்தநிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Atmospheric overlay circulation)
தெற்கு அந்தமான கடற்பகுதியில் (3.1 கி.மீ. உயரம் வரை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும்.
கனமழை (Heavy rain)
தமிழக கடலோர பகுதி வரை வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதன் காரணமாக கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23.11.2021
கனமழை (Heavy rain)
-
டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும் படிக்க...
இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!
Freezer Boxல் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அதிசயம்!
Share your comments