வங்கக்கடல் உருவானக் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கன்னியாகுமரி உட்பட 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
18ம் தேதி
இந்தக் குறைந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 18ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக கன மழை (Very Heavy rain)
தமிழக வட மாவட்டங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்யும்.
கன மழை (Heavy rain)
ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்.
அதேபோல புதுச்சேரி, காரைக்கால் நகரங்களிலும் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும்.
மிதமான மழை பெய்யும்.
16.11.21
-
நாளை நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலுார், தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
-
மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
வங்கக்கடல் பகுதியில் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது.
15.11.21
இதனால், இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்க 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை (Holidays for schools)
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும், வெள்ளத்தில் மிதக்கிறது.
இதனிடையே தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி- அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது!
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
Share your comments