தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நவம்பர் 12-ம்தேதி வரை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் நவம்பர் 12-ம்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே முன்கூட்டியே மக்கள் கீழ்காணும் அத்தியாவசிய பொருள்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
-
கேஸ் சிலிண்டர்
-
மண்ணெண்ணெய்
-
மெழுகுவர்த்தி
-
கொசுவர்த்தி
-
ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி,
-
மளிகைப் பொருள்கள்,
-
மாத்திரைகள்,
-
குழந்தைகளுக்கு தேவையான பால் பவுட்டர்,
-
நாப்கின்கள்
-
அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்கள்
-
பேட்டரி டார்ச்
-
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்
-
முதலுதவி சாதனங்கள்
என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது?
-
செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும்.
-
இடி மின்னல் சமயத்தில் செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம்.
-
இடி மின்னல் சமயத்தில் மரங்களுக்கு அருகில் ஒதுங்குவதைத் தவிர்க்கவும்.
-
மழை பொழியும் சமயத்தில் வீட்டைவிட்டு வெளியே அல்லது வெளியூர் செல்வதைத் தவிக்கவும்.
-
தாழ்வானப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்.
-
அரசு அலுவலர்கள் உங்களை வந்து அழைக்கும் பொழுது ஒத்துழைப்பு கொடுத்து அரசு நிவாரண மையங்களுக்குச் செல்வது பாதுகாப்பானது.
-
குழந்தைகளைத் தேவையின்றி வெளியே அனுப்ப வேண்டாம்.
-
தங்கள் பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் விளையாட வேண்டாம்.
-
மழை நேரங்களில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தண்ணீரைத் தேவையான அளவு பிடித்து வைத்துக் கொள்ளவும்.
-
எப்பொழுதும் டேங்கில் தண்ணீர் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
-
வீடுகளுக்கு அருகில் மரங்கள் இருந்தால் அதற்கு அருகில் அமர்வதைக் கட்டாயம் தவிர்க்கவும்.
-
மழை பெய்யும் நேரத்தில், மின் கம்பிகள் அறுந்துக் கிடக்க வாய்ப்பு உள்ளதால், சாலைகளில் கவனமாக நடந்து செல்லவும்.
-
வீட்டுச் சுவர்களில் நீர் கசிந்து மின்சாதனங்களில் மின்சாரம் பாய வாய்ப்புள்ளதால் மின்சாதனங்களை கவனத்துடன் பயன்படுத்தவும்.
-
சுவிட்ச் போடும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.
-
குழந்தைகளை சுவிட்ச் போட அனுமதிக்கக்கூடாது.
-
வானிலை நிலவரங்களை அடிக்கடி கவனியுங்கள், சூழ்நிலைக்கு ஏற்ப கவனத்துடன் செயல்படுவது மிக மிக அவசியமான ஒன்று.
-
வீண் வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்.
மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை!
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!
Share your comments