தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலடுக்கு சுழற்சி (மேலடுக்கு சுழற்சி)
இலங்கையின் மீது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கனமழை (Heavy Rain)
சேலம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை (Moderate rain)
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 5 (July 5)
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, திண்டுக்கல், கோவை, தேனி) மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை (Moderate rain)
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.
சென்னை (Chennai)
-
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
-
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
-
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம் மற்றும் செஞ்சியில் அதிகபட்சமாக 7 செ.மீ வெப்பநிலை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
ஜூலை 4 (July 4)
வங்கக்கடல் பகுதிகளில், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 7 வரை (Until July 7th)
அரபிக்கடல் பகுதியில் தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!
ஜூலை 31க்குள் ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: அமல்படுத்த உத்தரவு..!
Share your comments