நீலகிரி, கோவை மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வலுப்பெறும் (Strengthening)
வங்கக் கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.
கனமழை (Heavy rain)
தமிழகத்தில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
14.06.2021 ,15.06.2021
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, தர்மபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை (Chennai)
14.06.21
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
வங்கக் கடல் பகுதிகள் (Areas of the Bay of Bengal)
14.06.2021 முதல் 15.06.2021 வரை
மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)
14.06.2021 முதல் 15.06.2021 வரை
கேரளா, கர்நாடக மற்றும் கோவாக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
14.06.2021 முதல் 17.06.2021 வரை
-
அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
-
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!
Share your comments