தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை மூலமாக விதைச்சான்றளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணையில் வயல் தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.
வயல் தரங்களில் தேறிய விதைப்பண்ணைகளில் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டு அந்த விதைகள் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்படுகின்றன.
பகுப்பாய்வில் விதைத்தரம் தேறிய விதைகள் சான்று செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. சான்று பெற்ற விதைகளில் ஆதாரநிலை விதைகளுக்கு வெள்ளை நிற அட்டையும், சான்று விதைகளுக்கு நீல நிற அட்டையும் பொருத்தப்படுகிறது.
மேலும் சான்று பெற்ற விதைகளில் வெள்ளை நிற அல்லது நீல நிற அட்டையுடன் ஒரு பச்சை நிற உற்பத்தியாளர் அட்டையும் கட்டப்பட்டிருக்கும். இதைக்கொண்டு சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் எளிதாகக் கண்டறியலாம் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை- கால்நடை விவசாயிகள் கவனத்திற்கு!
சான்று பெற்ற விதைகள் அதிக புறத்தூய்மை, அதிக இனத்தூய்மை, அதிக முளைப்புத் திறன். குறைவான ஈரப்பதம் போன்ற குணநலன்களைக் கொண்டிருக்கும். எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கிப் பயன்படுத்தும் போது அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தற்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, ஏ.டி.ட்டி 53, சி.ஆர்.1009 சப்1, ஏ.டி.ட்டி(ஆர்) 45, கோ 51, ஏ.டி.ட்டி 37, ஏ.டி.ட்டி 43, திருச்சி 1, சம்பா மசூரி போன்ற நெல் இரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: தமிழகம்: 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை!
எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என விழுப்புரம் மாவட்ட அங்ககச்சான்று உதவி இயக்குநர் க.கதிரேசன் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்க அழைப்பு
Try This: ஆரோக்கியம் நிறைந்த கவுனி அரிசியை வைத்து இனிப்பு ரேசிபி!
Share your comments