தக்காளி சாகுபடியில் மேற்கொள்ளவேண்டிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில்
தக்காளி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு
-
தக்காளி சாகுபடியில், காய்ப்புழு மற்றும் புரொடீனியாப்புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் அமைக்க வேண்டும்.
-
தாக்கப்பட்ட பழங்களை பறித்து, புழுக்களை அழிக்க வேண்டும்.
-
எக்காலக்ஸ் 2 மி., ஒரு லி., நீரில் அல்லது கார்பரில் நனையும் துாள் 2 கிராம், ஒரு லி., நீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
-
டிரைகோடர்மா என்ற ஒட்டுண்ணி முட்டையை, பூக்கும் தருணத்தில் விட வேண்டும்.
தக்காளி பயிரில், நாற்றழுகல், முன் பருவ இலைக்கருகல், புசேரியம் வாடல், பாக்டீரியம் வாடல், இலைப்புள்ளி, தேமல் நோய், இலைச்சுருட்டு நோய், உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
இலைச்சுருட்டை நோய் பாதிப்பு
-
தற்போது, தக்காளி செடியில் இலைகள் மஞ்சள் நிறமாகி, சுருண்டு, வளர்ச்சி குன்றி காணப்படும் இலைச்சுருட்டை நோய் பாதிப்பு ஏற்டுகிறது.
-
இலைசுருட்டு நோய் தென்பட்டால், மஞ்சள் ஒட்டுப்பொறியை பயன்படுத்தி வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
-
களைகள் கட்டுபடுத்தவும், விளை நிலங்களை சுற்றிலும் தானிய வகை பயிர்கள் பயிரிட வேண்டும்.இமிடா குளோரைடு, 0.05 சதவீதத்தை, நடவு முடிந்த 15, 25, 45வது நாட்களில் தெளித்தால், இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
-
இலைகளில் புள்ளி ஏற்பட்டு, பெரிதாகி, வளையங்கள் உண்டாகும். தண்டுகள் மற்றும் காய்களிலும் காயங்கள் ஏற்படுகின்றன.இதனை கட்டுப்படுத்த, பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும்.
-
மேன்கோசெம் 0.2 சதவீதம் அல்லது மேன்கோலப் உடன் மெட்டலாக்சிஸ் 0.2 சதவீதம் அல்லது குளோரோதலானில் 0.2 சதவீதம் தெளிக்க வேண்டும்.
மேலும் படிக்க...
Share your comments