பயிரின் வளர்ச்சிக்கும் அதிக மகசூல் பெறவும் மண் புழு நீர் தெளிக்கலாம், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை, இந்த பதிவில் பார்ப்போம்.
தயாரிக்கும் முறை:
- சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட மண் புழு நீர் (WARMI WASH) தயாரிக்க 1அடி உயரம் 3அடி அகலத்துக்கு செங்கலை அடிக்கி அதன் மீது பெரிய பிளாஸ்டிக் டிரம் வைக்கவும்.
- அதன் கீழ்பகுதியில் டி ஜாயிண்ட்ப் பொருத்தி, ஒரு முனையில் குழாயையும் (PIPE) மறு முனையில் மூடியையும் பொருத்த வேண்டும்.
- கீழ் பகுதியில் அடைப்பு ஏற்பட்டால், இந்த மூடியை திறந்து சுத்தம் செய்யலாம்.
- டரம்மின் அடிப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு ¾ ஜல்லியை போட்டு அதற்கு பின் 1 அடி உயரத்திற்கு மணல் போட வேண்டும்.
- அதன்பின் நிலத்து மண்ணை போட வேண்டும். இதில் 200 முதல் 250 மண் புழுக்களை இட வேண்டும்.
- பின், வைக்கோல் காய்ந்து போன இலை தளைகளை பரப்பி, அதன் மீது சாணக்கரைசல் அல்லது சாண உருண்டைகளை போட்டு, தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- இவ்வாறு தினமும் செய்து, 16 நாள் கழித்து, அந்த ட்ரமில் உள்ள தண்ணீரை சேமிக்க வேண்டும்.
- அதுவே, மண் புழு நீர், இப்படியாக தயாரிக்கப்பட்ட நீரை பாத்திரத்தில் சேமிக்கலாம். இது சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட நீர் ஆகும்.
பயன்படுத்தும் முறை:
1 லிட்டர் மண் புழு நீரில் 9 லிட்டர் தண்ணீர் கலந்து எல்லா பயிர்களுக்கும் பூக்கும் முன் தெளிக்கலாம். பத்தாவது நாள், இதன் பலனை பார்க்க முடியும். 1லிட்டர் மண் புழு நீர்+1 லிட்டர் மாட்டு கோமியம்+8 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இது வளர்ச்சி ஊக்கியாக செயல்படும், மேலும் அவ்வாறு தெளித்து வந்தால் மண் வளமும் கூடுவதுடன் பயிர்கள் நன்றாக செழித்து வளரும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவது போல, அதிகமாக இதனை பயன்படுத்த கூடாது. எனவே, இந்த முறைபடி மண் புழு நீரை தயாரித்து, பயன்படுத்தி மகசூல் பெருக்கம் கண்டு மகிழும் விவசாயிகளாக மாறுங்கள்.
தகவல்: சு.சந்திர சேகரன்,
வேளாண் அலோசகர்,
அருப்புக்கோட்டை,
தமிழ்நாடு
மேலும் படிக்க:
Gokulashtami 2022: கோகுலாஷ்டமி அன்று எவ்வாறு வழிபட வேண்டும்!
Share your comments