சொட்டு நீர்ப் பாசனம் அல்லது நுண்ணீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது முதன்மை குழாய், துணை க் குழாய்கள், மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் ஆகிய அமை ப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தே வை யான நீரை , துளித்துளியாகமண்ணின் மேற்பரப்பிலோ அல்லது, பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோவழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறை யாகும்.
ஒவ்வொரு விடுகுழாய் அல்லது உமிழி மற்றும் புழை வாய், பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை , பயிர்களின் வேர்ப்பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது.நீராதாரம் குறை ந்து வந்தாலும், சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வந்தாலும் வாழும்மக்களுக்கு உணவு அளிக்க விளைச்சல் (உற்பத்தித்) திறனை அதிகரித்து தரமானஉணவு விளை விப்பைப் பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே , கிடைக்கும் நீரைக்கொண்டு வேளாண்மையை நீடித்த நிலையானவருவாய் பெற வேண்டிய அவசியமான நிலை யில் பயிர்த்த தொழிலாளர்கள்(உழவர்கள்) உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது. உணவு உற்பத்திக்குப் பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே நுண்ணீர்ப் பாசனத் திட்டமாகும் (சொட்டு நீர்ப் பாசனத் திட்டம்)
சொட்டு நீர்ப் பாசனத்தின் நன்மைகள்:
● குறை ந்த நீரைக்கொண்டு அதிகப் பரப்பில் பயிர் செய்யலாம்.
● 75% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம்.
● சாகுபடி செலவு குறைந்து அதிக வருமானம் கிடைக்கும்.
● களை எடுக்க வேண்டியதில்லை .
● ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்.
● தரமான விளை பொருள்களுடன் அதிக விளைச்சல் கிடைக்கும்.
சொட்டு நீர்ப் பாசன முறைகள்:
● சொட்டு நீர்ப்பாசனம் இரண்டு விதமாக மேற்க கொள்ளப்படுகிறது.
1. வெளிப்புறமாக குழாய்களைப் பதிப்பது
2. நிலத்துக்குக் கீழ் உட்புறமாக குழாய்களை ப் பதிப்பது
நில அமைப்பு:
தண்ணீரை தேக்கி வைக்க முடியாத மணல் பரப்புகளில் நீர்ப் பாசனம் அதிகஅளவில் தேவை ப்படும். அப்படிப்பட்ட நிலங்களில் சொட்டு நீர்ப் பாசனம் பேருதவியாக அமையும். மேலும் மலைச்சார்ந்த பகுதிகளில் தண்ணீர் வழிந்த போடுவது அதிகமாக இருப்பதனால், அப்படியான இடங்களில் சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் நீர் குறை வாகவும், கூடிய ஆற்றலுடனும் பயன்படுத்தப்படுவதனால் நீர் வீணாவது குறைக்கப்படும்.
காற்று வச்சு:
அதிக வே கத்தில் காற்று வசும் பொழுது தெளிப்பு நீர்ப் பாசனத்தின் (Sprinkler irrigation) மூலம் தண்ணீரை செலுத்துவது முடியாத காரியம். அப்படிப்பட்ட இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் நீரை அதிக வினை த்திறனுடன் பயன்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.
தண்ணீரின் அளவு:
கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ள இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் உதவியாக இருக்கும்.
தண்ணீரின் தரம்:
பயிருக்குச் செலுத்தப்படும் தண்ணீரின் உப்புத்தன்மை அதிகமாக உள்ளபோது, சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் செலுத்தினால், தண்ணீரின் உப்பு தேங்கி பயிரை தாக்குவது குறைக்கப்படும்.
விளைவிக்கப்படும் பயிர்:
பொதுவாகவே சொட்டு நீர்ப் பாசனம் செய்ய ஆரம்பச்செலவு அதிமாக ஆவதால் இது பெரும்பாலும் பழ மரங்கள் உள்ள தோட்டங்கள் போன்ற அதிக வருவாய் ஈட்டும் பயிர் நிலங்களில் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. இப்படிப்பட்ட சூழல்கள் நிலவக்கூடிய இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் அதற்கே உரிய சிறப்பம்சங்கள் மூலம் முன்னிலையில் இருக்கிறது.
சொட்டு நீர்ப் பாசனத்தின் பயன்கள்:
● உரங்கள் வீணாக்கப்படுவது குறைவு
● தண்ணீரை வீணாக்கப்படுவது குறைவு
● நிலங்களை சமன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை
● எப்படிப்பட்ட வடிவத்தில் உள்ள நிலங்களிலும் பாசனம்
செய்யலாம்.
● வேர்ப்பகுதியில் ஈரப்பதம் நிலை நிறுத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு:
த.தேசிங்கு ராஜன் மின்னஞ்சல்: desinghrajan1511@gmail.com இளங்கலை வேளாண் மாணவர்கள்மற்றும் முனை வர் பா.குணா, இணைப்பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், நாளந்தா வே ளாண்மை க் கல்லூரி, திருச்சி.
மின்னஞ்சல்: baluguna8789@gmail.com
மேலும் படிக்க
வெயில் கால பிரச்சனைகளை விரட்டி வெளுக்கும் வெள்ளரி!
அரிய தானியங்களைக் கொண்ட ஒரு விதை வங்கியைக் கட்டிய பழங்குடிப் பெண்!
Share your comments