பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஏனெனில் அதன் விஷத்தன்மை மிகவும் வீரியம் மிக்கது.
பாதுகாத்துக்கொள்ள (To protect)
இந்தியாவில் பாம்புக் கடியால், ஏற்படும் உயிரிழப்புகள் இன்றளவும் அதிகம் என்கின்றன புள்ளிவிபரங்கள். எனவே பாம்புகளின் குணாதிசயங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அதற்கு ஏற்றபடி நாம் நடந்துகொள்வதே, அவற்றிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும்.
276 வகை பாம்புகள் (276 Types of snakes)
குறிப்பாக விவசாயிகள்,பாம்புகளைப் பற்றிய பல சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது இன்றியமையாதது. வயல்வெளிகளின் வரப்பு ஓரங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்திய வில் மட்டும் சுமார் 276 வகை பாம்புகள் உள்ளன.
அதிக விஷம் கொண்ட பாம்புகள் (Highly venomous snakes)
-
நல்ல பாம்பு
-
கட்டு விரியன்
-
கண்ணாடி விரியன்
-
சுருட்டைப் பாம்பு
விஷமற்ற பாம்புகள் (Non-venomous snakes)
-
சாரைப் பாம்பு
-
தண்ணீர் பாம்பு
-
பச்சைப் பாம்பு
-
மலைப் பாம்பு
பாம்புகளின் குணாதிசயங்கள் (Characteristics of snakes)
-
சில வகையான பாம்புகள் இரவுநேரங்களில் நடமாடும்.
-
கட்டு விரியன் கண்ணாடி விரியன் உள்ளிட்ட சில வகையான பாம்புகள் குட்டி போடும்.
-
சில வகை பாம்புகள் முட்டையிட்டு,அடைக்காத்து குஞ்சுப் பொறிக்கும்.
-
பொதுவாகப் பாம்புகள் சுற்றுபுற த்தில் உள்ள வாசனையை உணரவே நாக்கை அடிக்கடி வெளியே நீட்டும்.
-
பாம்புகளால் ஒலி அலைகளை உணர முடியாது.
-
உடல் ரீதியான வளர்ச்சிக்காகவே அவை தோல் உறிக்கும். இதற்கு பாம்பு சட்டை கழற்றுதல் என்றும் அறிப்படுகிறது.
-
பொதுவாக வயல்களில் உள்ள தவளை மற்றும் எலிகளையேப் பாம்புகள் உணவாக உட்கொள்ளுகின்றன.
விவசாயிகள் கவனத்திற்கு (Attention Farmers)
-
இரவுநேரங்களில் நடக்கும்போது,காலணி அணிந்து நடக்க வேண்டியது மிக மிக அவசியம்.
-
உடலில் பாம்புக் கடித்த இடத்தை, உடனடியாக தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.
-
உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் செல்ல வேண்டும்.
தனியார் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்ப்பதே நல்லது. அதேநேரத்தில் எவ்விதக் கால தாமதமும் கூடாது.
-
இரவுநேரங்களில் அதிக பவர் உள்ள டார்ச் விளக்கை எடுத்து செல்லுதல் அவசியம்.
-
வயல்களில் ஆங்காங்கு பறவைகளுக்கானத் தாங்கிகளை வைக்க வேண்டும்.
தகவல்
அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் உயிர் உரங்கள்!
3 நாட்களில் 2.37 லட்சம் மரக்கன்றுகள்- நடவு செய்த விவசாயிகள்!
Share your comments