இந்தியாவில் சாணம் அடிப்படையிலான அங்கக உரங்கள் மூலம் சத்துகளை வழங்க போதுமான சாத்தியம் உள்ளது. இந்திய விவசாயத்தில் உழவர்களுக்கு போதுமளவு சாணம் கிடைக்கிறது. ஆனால், பெரும்பாலான உழவர்கள் அவற்றை உரத்திற்காக பயன்படுத்துவதில்லை. மற்ற உழவர்கள் அவற்றை அப்படியே முதிராத நிலையில் நிலத்தில் இடுவதால் அதன் மக்காத தன்மை வெப்பநிலையை அதிகரித்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரினை வெளியிட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
இதனால் மண்ணில் தழைச்சத்தின் அளவு குறைந்து பயிர்களின் உற்பத்தித் திறன் வெகுவாக பாதிக்கப்படுகின்றது. இம்மாதிரியான வழக்கம் பெரும்பாலான உழவர்களால் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றது.இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்குக் கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு முறையான தொழில்நுட்பங்களைக் கொண்டு உரமாக்குதல் மூலம் சாணம் நல்ல உரமாக மாற்றப்படுவது ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில உழவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் எருமையின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
அங்கக உரங்கள் மண்ணின் வளத்தையும், நலத்தையும் பாதுகாக்கின்றது. அதனுடள் அங்கக உரங்கள், தாவர ஊட்டச்சத்துக்கள், மண்ணிலுள்ள கரிமங்கள் மற்றும் மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் போன்றவற்றிற்கு ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் கிராமப்புறங்களில் சாணம் குவியலாக வைக்கப்படும்போது, பத்து ஆண்டுகளுக்கு பிறகும் கூட மிகவும் சூடாக இருக்கும். இது அதன் மோசமான தரத்தை எடுத்துக்காட்டுகின்றது. எக்காரணத்தைக் கொண்டும் உரம் சூடாக இருக்கக்கூடாது. சூடாக இருந்தால் அது நல்ல உரமாக இருக்காது எனவும் கருத்தில் உள்ளது.
அங்ககக் கரிமம் சத்துக்கள், இழந்த மண்ணுக்கு வாழ்வாதாரமாக திகழ்கின்றது மற்றும் முதிர்ந்த உரம் மண்ணின் வளத்தை புதுப்பிக்கக் கூடிய வாழ்வாதாரமாக உள்ளது. அங்கக உரங்கள் மண்ணின் வளத்தை பாதுகாப்பதுடன் நிலையான பயிர் உற்பத்தி மற்றும் நன்மையாக்கும் நுண்ணுயிரிகள் உற்பத்தி போன்றவற்றிற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
உரமாக்குதல் மூலம் பண்ணையிலுள்ள கரிமக் கழிவுகள் ஒரு நல்ல வளமுள்ள பொருளாக மாற்றப்பட்டு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இந்த மக்குதல் விகிதம், நுண்ணுயிர் வளர்ச்சி, அதாவது கார்பன்-நைட்ரஜன் விகிதம், ஆக்சிஜன் சப்ளை, ஈரப்பதம், அமில காரநிலை, வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்து அளவு போன்ற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. பயிர்களுக்கு உகந்த வளர்ச்சி காரணிகள் உரமாக்குதலில் உள்ளனவா என்பது, உரமாக்குதலின் தரம் மற்றும் பயிர்களின் வளர்ச்சியை பொறுத்து இருக்கின்றது.
40 நாட்களில் வலுப்படுத்தப்பட்ட உரம் தயாரித்தல்
இந்தியாவிலுள்ள பத்து உரம் தயாரிப்பு தொழில்முறைகளில், சஃபல் வெற்றிகரமான உரம் தயாரிப்பு முறையாக உருவெடுத்துள்ளது. இந்த முறையில் மிகவும் எளிமையான தத்துவங்களின் மூலம், அதாவது, இயற்கையான காற்றோட்டம், குவியலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பது, நுண்ணுயிரிகள் சேர்ப்பது மற்றும் இயற்கை ஊட்டச்சத்துக்கள் சேர்ப்பது போன்ற வழிகளின் மூலம் உரம் தயாரிக்கப்படுகின்றது.
குவியலை சமப்படுத்துதல்
இயற்கையாக சாணக்குவியல் கூம்பு வடிவிலும் அல்லது கூரை வடிவிலும் இருக்கும். அதனை 2½ அடி கொண்ட குவியலாக சமப்படுத்துவதன் மூலம் காற்றோட்டம் மற்றும் நுண்ணயிரிகளின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
குவியலை களைத்து விடுதல்
சாணக்குவியிலின் வெப்பநிலையை 730 C லிருந்து 32-400 C குறைக்க, குவியிலில் மேலிருந்து கீழாக 1லிருந்து 1½ அடி இடைவெளியில் 600 கோணத்தில் 2.5 லிருந்து 3” இன்ச் ஆழமாக துளை இடவேண்டும்.
உரமாக்குதலுக்கான கலவை மற்றும் மதிப்புக் கூட்டு கரைசல்களை சேர்க்க வேண்டும்.
மதிப்புக்கூட்டு தாதுக்களை குவியலின் மேற்பரப்பில் துளைகள் இட்டவுடன் இட வேண்டும். அதன் பின்னர் 6-8 மணி நேரத்திற்கு பிறகு வெப்பநிலை சீரானவுடன் உரமாக்குதலுக்கான ஊடகக் கலவை இடவேண்டும்.
முதிர்வுக்கான குறியீட்டை 40வது நாளில் சோதனை செய்ய வேண்டும்.
பொருள் மற்றும் செய்முறை
காரணிப்பொருளை சேர்த்தல்
நுண்ணுயிர் காரணிப்பொருட்கள், கரிம பொருட்கள் மற்றும் கழிவுகளை துரிதமாக மக்கச்செய்து உரமாக மாற்றப்பயன்படுகிறது. குவியலின் வெப்பநிலை குறைந்தவுடன் ஒரு வாரகாலம் ஆன உரமாக்குதலுக்கான ஊடகத்தைச் சேர்க்க வேண்டும். இந்த ஊடகம் ஒரு சாடியில் 5-7 நாட்கள் வரை நொதிக்கச் செய்து, அதனை பயிர்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக, நுண்ணுயிரிகள் மிகுந்ததாக மாற்றப்படுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த ஊடகத்தை நீருடன் கலந்தோ அல்லது கலக்காமலோ 2 முதல் 3 லிட்டர் துளை என்றவாறு 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் ஊற்றுவதன் மூலம் மக்குதல் துரிதப்படுத்தப்படுகின்றது. அதே போல் பஞ்சகாவ்யத்தில், நன்மை பயக்கக்கூடிய நுண்ணுயிரிகளான லாக்டிக் அமில பாக்டீரியா, ஈஸ்ட், ஆக்டினோமைசீட்ஸ், ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியா மற்றும் சில பூஞ்சாண வகை உயிரிகளும், நுண்ணுரங்களான அசிட்டோபாக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா போன்றவைகளும் காணப்படுகின்றன.
உரமாக்குதல் ஊடகத்தின் கலவைகள்
மாட்டுசாணம்(புதிது) : 30 to 40 கிலோ
மாட்டு கோமியம் : 20 to 30 லிட்டர்
மோர் : 4 to 6 லிட்டர்
நாட்டுச் சர்க்கரை : 2 கிலோ
செழிப்பான மண் : 5 கிலோ
மதிப்புக் கூட்டுதல்
மேற் குறிப்பிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு அதனை நீர் மற்றும் மாட்டுக் கோமியத்தில் கலந்து பின் ஒரு பீப்பாயில் சீரான கரைசல் வரும் வரை வைக்க வேண்டும். அதன் பின்னர் உரக் குவியலின் மேலிட்ட துளைகளில் ஒரே ஒரு முறை ஊற்ற வேண்டும். உரமாக்குதலில் மதிப்புக் கூட்டு பொருட்கள் கீழ்குறிப்பிட்ட விகிதத்தில் அளிக்கப்படவேண்டும்.
பொருட்கள் |
ஊட்டச்சத்து அளவு |
ஒரு டன் சாணத்துடன் இடக்கூடிய பொருட்களின் அளவு |
(பாறை) ராக் பாஸ்பேட்/ எலும்புத்தூள் |
பாஸ்பேட் 20% |
30-40 கிலோ வரை 2-5% மொத்த அளவில் இடவேண்டும். |
பைரட் |
சல்பர் மற்றும் இரும்பு 20% ஒவ்வொன்றும் |
30 முதல் 40 கிலோ வரை 2-5% மொத்த அளவில் இட வேண்டும் |
ஜிப்சம் |
சல்பர் 14 முதல் 20% |
30 முதல் 40 கிலோ வரை 2-5% மொத்த அளவில் இட வேண்டும் |
சாம்புர பாசிதை (மூரைட் ஆப் பொட்டாஷ்) |
பொட்டாஷ் 48-60% |
20 முதல் 40 கிலோ வரை 2-3% மொத்த அளவாக இட வேண்டும் |
சஃபல் உரம் தயாரிப்பு தொழில்நுட்பத்தின் நன்மைகள்
உரக்குவியலை தொடர்ச்சியாக திருப்புதல் இம்முறையில் அவசியம் இல்லை.
உரமாக்குதல் அமைப்பு, கட்டுமானம் அவசியமில்லாததால் எந்த கூடுதல் செலவும் இல்லை.
மிகவம் எளிமையான முறைகளைப் பின்பற்றுவதால் மூன்று மணி நேர உழைப்பே போதுமானதாகின்றது.
சந்தை சார்ந்த எந்த உள்ளீட்டு பொருட்களும் தேவையில்லை.
இம்முறையில் கனிமப்படுத்துதல் விரைவில் நடைபெறுவதால், ஊட்டச்சத்துகள் எப்பொழுதும் தயாராகவும் மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய வகையிலும் இருக்கின்றன.
நுண்ணுயிரிகளின் அதிகப்படியான செயல்பாடுகள் மற்றும் மக்குதல் செயல்பாடுகளால் சீரான வெப்பநிலையில் மற்றும் இயற்கையான தாதுக்களினால் உரத்தின் தரம் உயர்ந்ததாகக் காணப்படுகின்றது.
45 நாட்களில் தயாரிக்கப்பட்ட சஃபல் உரமாக மற்ற வெளிநாட்டு உரங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு தரத்தில் சிறந்ததாகும்.
அங்கக உரங்களின் பயன்கள்
மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து நுண்ணூட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
மண்ணிலுள்ள மட்கிய பொருட்களை அதிகரித்து மண்ணை செழிப்பானதாக்குகின்றது.
நிலத்தின் நற்பண்புகளை அதிகரிக்கின்றது.
மணல் கலந்த களிமண் மற்றும் வடிகால் மண்ணில் நீர் தக்கவைக்கும் திறனை அதிகரிக்கச் செய்கின்றது.
மண்ணின் தாங்கல் செயல்பாடுகளை அதிகரிக்கின்றது.
மண் அரிப்பைத் தடுக்கின்றது.
இந்த சஃபல் உரம் வளர்ச்சி ஊக்கிகள், வைட்டமின்கள், ஹார்மோனகள் மற்றும் நோய் எதிர்ப்பு காரணிகளை பயிர்களுக்கு வழங்குகிறது.
Related Links: https://tamil.krishijagran.com/horticulture/organic-farming-recycling-farm-waste-composting-garden-waste-organic-inputs-and-techniques/
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments