1. விவசாய தகவல்கள்

வறண்டக் களர் நிலத்தைச் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றுவது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to make dry land suitable for cultivation?
Credit : LDC News

களர்மண் என்பது மண்ணிலேயே அதிக உப்பு தன்மை சேர்ந்திருக்கும் நிலம். ஒரு கல் உப்பை ருசிப்பதற்கும், ஒரு கைப்பிடி உப்பை வாயில் போடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ, அதைப் போன்றது.

களர் நிலத்தின் தன்மை (The nature of the dry land)

அதுபோல்தான் பயிர்களுக்கு இந்த களர்மண்ணில் இருக்கும் ஒரு கைப்பிடி மண் எடுத்தால் அதில் ஒரு கைப்பிடி உப்பு இருக்கும் என்று அர்த்தம்.

உப்பை நீக்க (Remove the salt)

களர்வகை மண்ணில் உள்ள உப்பை முதலில் கரைக்கனும். பிறகு அந்த மண்ணில் இருந்து அதனைக் கடத்த வேண்டும்.

மழையில் கரையும் உப்பு (Salt soluble in rain)

பொதுவாக மழை பெய்யும்போது, மழை நீர் மண்ணில் உள்ள உப்பைக் கரைத்துவிடும். இதைத்தொடர்ந்து உப்பைக் கடத்த வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டியது, நீரைத் தேக்கி வைத்துக்கொள்வது.அப்படி செய்யவில்லை எனில் மேல் உள்ள உப்பு கரைந்துவிடும். ஆனால் அடி மண்ணில் உப்பு அப்படியே இருக்கும்.

கரைகள் தேவை (Borders are required)

இதைத் தடுக்க நிலத்தில் முழங்கால் உயரம் அல்லது இரண்டரை அடி வரைக் கரைகள் போட வேண்டும்.

உழவு (Plowing)

கரைகள் போட்ட பின்பு நிலத்தை நன்கு உழவேண்டும். ஒன்னேகால் அடி மண் வெளியே தெரியும்படி உழ வேண்டும்.

இறகு வார்ப்பு கலப்பை (Feather casting plow)

இப்படி செய்வதற்கு வேளாண்மை பொறியல் துறையில் இறகு வார்ப்பு கலப்பை இருக்கும். அதனை வாடகைக்கு எடுத்து வந்து, உழ வேண்டும். இந்த கலப்பைக்கு ஒரு மணி நேரத்திற்கு 340 ரூபாய் வாடகை. இந்த கலப்பை மண்ணை நன்றாக திருப்பிப் போடும்.

வரப்பு

இதற்கு, மழை பெய்யும் பொழுது சென்று (மழை பெய்ய ஆரம்பித்து இரண்டு மணி நேரம் கழித்து) வரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி நீரை வெளியேற்றுங்கள். நீர் முழுவது வெளியேறிய பின்பு மீண்டும் கரையை அடைத்துவிடுங்கள். ஒருவேளை நிலத்தில் பயிர்கள் இருந்தாலும் நீரை தேக்கி வைத்துக்கொள்வது நல்லது.

நிலையான மாற்றம் (Fixed change)

  • ஏனெனில் நாம் நீரை நிலத்தில் நிறுத்த போவது இரண்டு மணி நேரம்தான் இப்படி செய்வதுதான் நிலையான மாற்றத்திற்கான முதல் படி. அடுத்ததாக எந்த விவசாயம் செய்தலும் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும்.

  • ஏனெனில் நாம் தண்ணீரை நிறுத்தி வைப்பது 2 மணி நேரம் மட்டுமே. அடுத்ததாக 5 அல்லது 6 லோடு சாணம் போட்டுப் பரப்பி உழுது விவசாயம் செய்ய வேண்டும்.

  • அதிக அளவு உழுக உழுக நிலம் வளமாக மாறும். சாணம் என்பது அமிலம். இது உப்புக்கு எதிராக வேலை செய்து வேர் நன்கு மண்ணுக்குள் ஊடுருவ வழிவகை செய்யும்.

இயற்கை மருந்து (Natural medicine)

  • இயற்கையான மருந்துகளான ஜீவா அமிர்தம் , பஞ்சகாவியா ஈ .எம் கரைசல் , மீன் அமிலம் , அமிர்தக் கரைசல் ஆகியவற்றைத்தான் பயன்படுத்த வேண்டும்.

  • ஒவ்வொரு முறையும் தரைவழி தண்ணீர் கொடுக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் கலந்து விட வேண்டும்.

மாற்று வழி (Alternative way)

இவை அனைத்தையும் தவிர்த்துத் தக்கை பூண்டு என்ற பசுந்தாள் உரம் உள்ளது. அதைப் போட்டு 50-வது நாள் மடக்கி உழுது மண்ணில் உள்ள உப்புத்தன்மையை நீக்கிலாம்.
கேழ்வரகு , வெள்ளை சோளம் போன்றவை உப்புக்களை உறிஞ்சும் பயிர்கள் இவற்றை அதிகம் பயிர் செய்யலாம். தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். அப்படி செய்தால், நிலம் சாகுபடிக்கு ஏற்ற நிலமாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.

மேலும் படிக்க...

டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கலாம்! வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை!

கால்நடைகளுக்கான தீவனப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்!

தென்னை மரங்களுக்கு இடையில் பசுந்தீவன சாகுபடி! இனி தீவனத் தட்டுப்பாடு இல்லை

English Summary: How to make dry land suitable for cultivation? Published on: 15 May 2021, 07:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.