வறண்ட நிலத்திலும், மானாவாரி விவசாய நிலங்களில் மழை நீரை சேமித்து பயிர்களுக்கு பயன்படுத்துவதற்காக ஹைட்ரோஜெல் எனும் தொழில் நுட்பத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி துறை அறிமுகம் செய்துள்ளதாக வேளாண் கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் தின கொண்டாடாட்டம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள், அப்பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். வறண்ட நிலப்பகுதியான விருதுநகர் மாவட்டத்தில் நீர் சிக்கனத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வேளாண் தொழில் நுட்பமான ஹைட்ரோஜெல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
நீரை உறிஞ்சி வெளியேற்றும் ஹைட்ரோஜெல்
ஹைட்ரோஜெல் குறித்து மாணவிகள் கூறியதாவது, வறண்ட மற்றும் மானாவாரி விவசாய நிலங்களில் மழை நீரை சேமித்து பயிர்களுக்கு பயன்படுத்துவதற்காக ஹைட்ரோஜெல் எனும் வேதிப் பொருளை இந்திய வேளாண் ஆராய்ச்சி துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜெல் பழுப்பு நிறத்தில் சவ்வரிசி போன்று இருக்கும். இதன் மீது நீர் பட்டவுடன் தன் இயல்பான எடையை விட 400 மடங்கு எடையுள்ள நீரை உறிஞ்சி சேமித்து சிறிது சிறிதாக மண்ணில் வெளியேற்றும் விதமாக மாறுகிறது.
ஒரு ஹெக்டேருக்கு 2.5 கிலோ ஹைட்ரோஜெல்
இதன் மூலம் வறண்ட மற்றும் மானாவாரி நிலங்களில் பயிரின் வேரில் சிறிது சிறிதாக தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யும். தண்ணீர் மட்டுமின்றி உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளையும் உறிஞ்சி சேமித்து வெளியேற்றும். உப்புடன் கூடிய கடின தன்மையுடைய நீரையும் அதிக அளவில் உறிஞ்சும். மண்ணில் ஒரு ஆண்டு வரை நிலைத்திருக்கும் இதை இறவை பாசன பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் 1 ஹெக்டேருக்கு 2.5 கிலோ எடை ஹைட்ரோஜெல்லை பயன்படுத்தலாம் என்றனர்.
மேலும் படிக்க...
சரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு!
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளோம்- பிரதமர் மோடி டுவிட்!
Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !
Share your comments