மண்ணில்லா விவசாயம், குறைந்த உற்பத்தி இடத்தில் காய்கறிகளை திறம்பட பயிரிடும் வாய்ப்பை வழங்குகிறது. இதனை ஆங்கிலத்தில் Hydroponics Farming என்கின்றனர். இம் முறையானது தோட்டக்கலையில் நல்ல லாபம் ஈட்டலாம். இதற்கு அரசின் மானியம் என்ன என்பதை பார்க்கலாம்.
அரசு மானியம்
50% சதவீத மானியத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெருநகரங்களுக்கு பின்னேற்புமானியமாக ரூ.15,000/- வழங்கப்படுகிறது.
இதன் நன்மைகள்
மண்ணில்லுள்ள பூச்சி மற்றும் நோய் பாதிப்பின் காரணிகள் இம்முறையில் தாக்குவது மிக குறைவு
களைகள் இம்முறையில் அறவே கிடையாது. எனவே தொழில் செலவு குறைவு.
என்னன்ன பயிர்கள் செய்யலாம்?
- அனைத்து வகையான கீரைகள், தக்காளி மற்றும் வெள்ளரியை, இம்முறை மூலம் பயிரிடலாம்.
- ஹைட்ரோபோனிக்ஸ் அமைப்பதற்கான வரையறைகள்
- NFT தடங்கள் (NFT Channel) யு.பி.வி.சி, 100*50 மிமீ, 32 அடி, மூடிய மற்றும் திறந்த விளிப்பு மூடி
- தாங்கும் அமைப்பு - துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel, Dismantle, Easy To assemble) 4*2 அடி, 1 அங்குளம் விட்டம்
- குழாய் இணைப்புகள் - யு.பி.வி.சி, 1 அங்குலம் விட்டம், T & L bend, inlets & outlets
- 40 வாட் நீரில் மூழ்கிய மோட்டார்
- <0.5 மின்கடத்து திறன், பெர்லைட் கலவை
- மூன்று மாதத்திற்கான ஊட்டச்சத்து
- வலை அமைப்பிலான தொட்டி (Planter Pots) - 2 அங்குலம்,
- கார அமில நிறங்காட்டி
- 25 லிட்டர் தொட்டி
- விதைகள்
மேலும் படிக்க:
கிணறுகளின் நீர்மட்டம் அறிய ஜல்தூத் செயலி அறிமுகம்!
தமிழகம்: நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களை கோரும் விவசாயிகள்!
Share your comments