வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்ப பெறும்வரை, எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் தயாராக இல்லை என விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 137வது நாளாக விவசாயிகள் டில்லி எல்லையில் போராடி வருகின்றனர்.
மத்திய அரசுடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர்.
கொரோனா பரவல் (Corona spread)
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்தார்.
அறிக்கை (Statement)
இந்த விவகாரம் குறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பேச்சுவார்த்தைக்குத் தயார் (Ready to negotiate)
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கடந்த ஜனவரி 22ம் தேதி எங்குப் பேச்சுவார்த்தையை விட்டோமோ, அதே இடத்திலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் துவங்க தயாராகவுள்ளோம். அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர்.
சட்டங்கள் வாபஸ் (Laws back)
மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீடிக்கும் சிக்கல் (Prolonged problem)
விவசாயிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியான உள்ளதால், போராட்டம் முடிவுக்கு வருவதில், சிக்கல் நீடிக்கிறது.
மேலும் படிக்க....
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments