
வளிமண்ட ல மேலடுக்கு கழற்சி ( Easterty waves ) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில், ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட பல பகுதிகளில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேர்ந்தது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய பருதியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
7-01-21 & 8-01-21:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை(Chennai)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச மழைபதிவு (Maximum Rain)
அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 21 சென்டிமீட்டரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தாம்பரத்தில் 16 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
திசுவாழை வளர்ப்புத் திட்டம்- விவசாயிக்கு தலா 2,500 வாழைக் கன்றுகள் இலவசம்
பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!
Share your comments