வீட்டுத்தோட்டமாக இருந்தாலும், வெளியில் தனித் தோட்டமாக இருந்தாலும் பச்சை மிளகாய் வளர்ப்பவர்கள் நாற்றாங்கால் தொடங்கி காய்க்கும் பருவம் வரை பூச்சி தாக்குதலிலிருந்து கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, பூச்சி தாக்குதலிலிருந்து விடுபட சில டிப்ஸ்களை இப்பகுதியில் பார்க்கலாம்.
பச்சை மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடலாம். ஜனவரி – பிப்ரவரி, ஜூன் – ஜூலை, செப்டம்பர் – அக்டோபர் ஆகிய மாதங்கள் பயிரிடலாம் எனக் கூறப்படுகிறது. மிளகாய் வளருவதற்கு மித வெப்பமான பருவமே ஏற்றது ஆகும். அதாவது அதிக குளிரோ, அதிக வறட்சியோ இதைப் பயிரிட ஏற்றதல்ல. எனவே சூரிய வெப்பம் நிலத்தில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சாத பருவமாக இருந்தால் பச்சை மிளகாய் வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இதன் வளர்பு முறை என்று பார்த்தால் நாற்றங்கால் நிலத்தினை வடிகால் வசதியுள்ள நிழல் இல்லாத பகுதிகளில் மேட்டுப் பாத்தியாக அமைக்க வேண்டும். அதோடு,போதிய அளவு விதையை மட்டும் கலக்கமாக விதைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும். விதைகளை விதைப்பதற்கு முன்பு திராம் அல்லது கேப்டான் மருந்துடன் கிலோவிற்கு 4 கிராம் வீதம் மருந்திட்டு விதைக்கலாம். மண்ணிலிருந்து தாக்கும் பூசணங்களையும் சிறிது காலத்திற்கு தடுத்து விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கலாம்.
பூச்சு தாக்குதலிலிருந்து விடுபட டிப்ஸ்:
- மிளகாய் செடியை இலைப்பேன், அசுஉணி, செஞ்சிலந்து ஆகிய மூன்று விதமான பூச்சிகள் தாக்குகின்றன.
- இவற்றை முறையான மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
- அதேபோன்று காய் பிடித்திருக்கும் பருவத்தில் காய் துளைப்பான் பூச்சிகள் தாக்கும்.
- இவற்றினை விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை அளிக்கலாம். மிளகாய் காய்த்த உடன் அவற்றை பறித்துவிடவேண்டும்.
- அப்பொழுதுதான் புதிய பச்சை மிளகாய்கள் காய்க்கும்.
- அதேபோல் மிளகாய் செடிகளுக்கு அருகில் உளுந்து, பாசிப்பயறு செடிகளை பயிரிட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் விடுபட்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என்கின்றனர் வேளாண்மைத்துறை அதிகாரிகள். இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மிளகாய் உற்பத்தி அதிகரிக்க உதவும்.
மேலும் படிக்க
Share your comments