1. விவசாய தகவல்கள்

பயிர்க் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
PMFBY

பயிர்க் காப்பீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, விவசாயிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் விவசாயிகள் விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நாட்டில் இம்முறை பருவமழை மாற்றத்தால் பெய்த மழையால், பயிர்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.  மகாராஷ்டிர மாநிலத்திலும் பருவமழை பொழிவால் பயிர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளன.  பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களை மாநில விவசாயிகளுக்கு நீட்டிக்க வேளாண் ஆணையர் அலுவலகத்தில் பலமுறை கேள்வி எழுப்பிய பின்னர், காப்பீட்டு நிறுவனங்கள் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவை (PMFBY) செயல்படுத்த வழிவகுத்து, பணம் செலுத்தத் தொடங்கியது. தரவுகளின்படி, இந்த வார இறுதி வரை, மாநிலத்தின் 29.92 லட்சம் விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ.1,770 கோடி மதிப்புள்ள காப்பீட்டுக் கோரிக்கை தொகை வந்து சேரும். மீதமுள்ள தொகை அடுத்த 7 நாட்களில் வழங்கப்படும் என வேளாண் துறை ஆணையர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.

வானிலை பற்றி பேசுகையில், மகாராஷ்டிராவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பருவமழை நீண்ட காலமாக வறண்டு காணப்பட்டது. இருப்பினும், ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, பருவமழை வேகம் அடைய தொடங்கியது, பின்னர் செப்டம்பர்-அக்டோபரில், இங்கு கனமழை பொழிந்தது. ஆகவே தான், பருவநிலை மற்றும் உள்ளூர் பேரிடர் ஆகிய இரண்டிற்கும் பயிர் இழப்புக்காக மொத்தம் 47.61 லட்சம் கோரிக்கைகள் வந்து சேர்ந்தன.  இந்தக் கோரிக்கைகளுக்காக மொத்தம் ரூ.2,750 கோடியை காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

விரைவில் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பயிர்க் காப்பீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, விவசாயிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் கோரிக்கை விடுத்தனர், மேலும் விரைவில் இந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.  மேலும், பல மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததால் பயிர்கள் முழுவதுமாக நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்ததால், மகாராஷ்டிர விவசாய அமைச்சர் தாதாசாஹேப் பூசே விரைவில் பணம் வழங்குவதாக உறுதியளித்தார்.

காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸின் கூற்றுப்படி, காப்பீட்டு நிறுவனங்களால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது, விவசாய ஆணையர் அலுவலகத்தின் தொடர்ச்சியான பின்தொடர் நடவடிக்கைகள் காரணமாக, காப்பீட்டு நிறுவனங்கள் இந்த வாரம் முதல் தங்கள் கட்டண அட்டவணையைத் தொடங்கியது.  இதன்பின், வெள்ளிக்கிழமை வரை, 29.92 லட்சம் பயனாளிகளுக்கு, 1,770 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள தொகை அடுத்த ஏழு நாட்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிர் இழப்புக்கு இழப்பீடு கிடைக்கும்

PMFBY குறிப்பிடத்தக்க வகையில், தீவிர வானிலை மாற்றங்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு எதிராக விவசாயிகளுக்கு, பயிர்களை காப்பீடு செய்ய அனுமதிக்கிறது. விவசாயிகள் பிரீமியத்தில் ஒரு சிறிய பகுதியை செலுத்துகிறார்கள், மீதமுள்ள தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இதற்கு விவசாயிகள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் சேதங்களுக்கான உரிமைகோரல்களை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

மராத்வாடா மற்றும் விதர்பா விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர்

PMFBY, பெரும்பாலான விவசாயிகளுக்கு மாற்று வழி இருந்தாலும், அதைத் தொடர்ந்து பயன்பெறும் விவசாயிகளிடையே இது மிகவும் விரும்பப்படுகிறது. மேலும், இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். மரத்வாடா மற்றும் விதர்பா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். தீவிர பருவநிலை மாற்றத்தால் பயிர் இழப்புகள் அதிகமாக உள்ளன.  இருப்பினும், இந்த திட்டம் பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், விவசாய சங்க தலைவர்கள் சரியான நேரத்தில் கோரிக்கைகளை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக கேள்வி எழுப்புயுள்ளனர்.

மேலும் படிக்க:

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அரசின் புதிய முயற்சி!

PM Kisan திட்டத்தில் இது ஆறாவது மாற்றம்! விவரம் இதோ!

English Summary: Insurance companies paying crop insurance premiums! Published on: 13 December 2021, 04:02 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.