நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் சூழல் உள்ளதால், பயிரிட்டுள்ள நெல், வெங்காயப் பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை இடர்பாடுகள் (Natural Disasters)
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்-II (சம்பா) பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புயல், வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதல், ஆகிய இயற்கை இடர்பாடுகளில் இருந்துப் பாதுகாத்துக் கொள்ள காப்பீடு செய்து கொள்வது அவசியமாகிறது.
அரசாணை
நாமக்கல் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல்-II (சம்பா) மற்றும் வெங்காயம்-II பயிர் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, நெல்-II (சம்பா) 21 பிர்காக்களிலும் மற்றும் வெங்காயம்-11 6 பிர்காக்களிலும் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளது.
காலக்கெடு (Deadline)
கடன் பெறும் விவசாயிகள் சம்மந்தப்பட்டத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில், நெல்-11 (சம்பா) பயிருக்கு வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள்ளும், வெங்காயம்-11 பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பிரீமியம் தொகை (Amount of premium)
ஒரு ஏக்கருக்கு நெல்-11 (சம்ப) பயிருக்கு ரூ.519 பிரீமியம் மற்றும் வெங்காயம் - பயிருக்கு ரூ.1,920 பிரீமியம் செலுத்த வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
-
கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல்
-
விதைப்பு சான்றிதழ்
-
வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
-
ஆதார் அட்டை நகல்
பயிர் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு விண்ணப்பத்துடன் மேற்கூறி ஆவணங்களுடன் இணைத்து கட்டணத்தை பொதுச்சேவை மையங்கள், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செலுத்த வேண்டும்.
தொடர்புக்கு (Contact)
இதுகுறித்த விபரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலக அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரித்துள்ளார்.
மேலும் படிக்க...
பட்டுப்புழு வளர்க்க விருப்பமா?கருவிகள் வாங்க ரூ.52,500 வரை மானியம்!
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
Share your comments