1. தோட்டக்கலை

வாழைச் சாகுபடியில் மழைக் கால உரநிர்வாகம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rainy season fertilizer management in banana cultivation!
Credit : Vikatan

தொடர் மழையால் வாழைச் சாகுபடியில் ஏற்பட்டுள்ள உரஇழப்பை எவ்வாறுத் தவிர்ப்பது என்பது குறித்து திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் யோசனை தெரிவித்துள்ளது.

கனமழை (Heavy rain)

வடகிழக்குப் பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவானக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வாழைச் சாகுபடி செய்யப்படும் பெருவாரியான வாழைத்தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது.

வீணாகும் உரம் (Wasted compost)

  • இந்த மழை நீரை தோட்டங்களிலிருந்து வடிக்கும் பொழுது, இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையாக இடப்பட்டுள்ள பொட்டாஷ் உரம் தண்ணீரில் கரைந்து வீணாகிறது.

  • இதனால், வாழைக்குத் தேவையான பொட்டாஷ் உரம் சரிவர கிடைக்காமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

  • இதனால், வாழையில் 20 முதல் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படலாம்.

    இதனைத் தவிர்ப்பதற்கு, பருவமழை நின்ற உடன், மரம் ஒன்றுக்கு 100 கிராம் யூரியா, 150 கிராம் மூரியேட் ஆப் பொட்டாஷ் மற்றும் 100 கிராம் டோலமைட் (கால்சியம் - மக்னீசியம் கார்பனேட்) உரங்களை மண்ணில் இடவேண்டும்.

  • மேலும், இலை வழியூட்டமாக, 1 சத பொட்டாஷியம் நைட்ரேட் கரைசலையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்), 1 சத கால்சியம் நைட்ரேட்டையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கும் 10 கிராம்) இலைமேல் தெளிக்க வேண்டும்.

  • மேலும், வாழைக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் நுண்ணூட்டச் சத்துக்குகளும், மழை நீரைத், தோட்டங்களிலிருந்து வடிக்கும் பொழுது வீணாக வாய்ப்புள்ளது.

நுண்ணூட்டச் சத்துக்கள் (Micronutrients)

  • இந்த இழப்புகளைச் சரிக்கட்ட, வாழைக்கு நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவது மிகவும் அவசியம்.

  • இதற்கு, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின், வாழை நுண்ணுட்டக் கலவையான ‘பனானா சக்தி’-யை இரண்டு சத கரைசலாக (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம்) இலைமேல் தெளிக்கவும்.

  • ஒரு கிலோ பனானா சக்தி நுண்ணூட்ட உரத்தின் விலை ரூ.150 ஆகும்.

அதிக மகசூல் (High yield)

ஆகவே, வாழைச் சாகுபடியில் அதிக பருவமழைப் பொழிவினால் ஏற்பட்டுள்ள இத்தகைய பொட்டாஷ் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் இழப்புகளை, மேற்குறிப்பிட்ட முறையில் நிவர்த்தி செய்து, விவசாயிகள் அதிக மகசூல் பெற்றுப் பயனடையலாம்.

இவ்வாறு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் பால.பத்மநாபன் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

மேலும் படிக்க...

பட்டுப்புழு வளர்க்க விருப்பமா?கருவிகள் வாங்க ரூ.52,500 வரை மானியம்!

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

English Summary: Rainy season fertilizer management in banana cultivation! Published on: 16 November 2021, 10:45 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.