சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய் புழுக்கள் தாக்கத்தால் பருத்தியில் மகசூல் இழப்பு (Yield Loss) ஏற்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை கடைப் பிடித்து இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
கட்டுப்படுத்தும் முறை
கோடை உழவு செய்வதால் மண்ணில் உள்ள புழுக்கள், வேர் புழுக்கள் நோய்களின் வித்துக்கள் மேற்புறத்திற்கு வரும். இவை சூரிய ஒளியில் (Sun light) அழிக்கப்படுகிறது. கடைசி உழவிற்கு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதால், தண்டுகளை வண்டு தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துகிறது. தொழுஉரம் கம்போஸ்ட் போன்ற அங்கக உரங்களை அதிகமாக இடுவதால் மண் மூலம் பரவும் நோய்கள், வேர்ப்புழு, நுாற்புழு தாக்குதலை குறைக்கலாம். ஒரே நேரத்தில் விதைப்பு செய்வதும், ஒரே வயது ரகங்களை பயிரிடுவதும் பூச்சி நோய்களை கண்காணிக்க உதவுகிறது.
ஊடுபயிர்
ஒரு கிலோ விதைக்கு 100 மில்லி அடர் கந்தக அமிலம் சேர்த்து 45 நிமிடங்கள் கிளறி நீரில் கழுவி காய வைத்து விதைக்க வேண்டும். அமில விதை நேர்த்தி செய்வதால் விதையுடன் இருக்கும் வித்துக்கள் பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகிறது.
பருத்தியை (Cotton) சுற்றி ஆமணக்கு பயிரிடும் போது காய் புழுக்களின் முட்டை குவியல்கள், சிறு குழுக்களை ஆமணக்கு பயிரின் பக்கம் திருப்பி அழித்துவிடலாம். ஊடுபயிராக (Intercroping) தட்டை பயிறு, உளுந்து, மக்காச்சோளம் பயிரிட்டால் பருத்தியை தாக்கும் இயற்கை எதிரிகளான ரைசோபா பூச்சி, பொறிவண்டு அதிக அளவில் பெருகும். இவை அசுவினி, வெள்ளை ஈ, தத்துப் பூச்சிகளை பெருமளவில் அழித்துவிடும்.
எக்டேருக்கு 15 இனக்கவர்ச்சி பொறிகளை வைத்தால் காய் புழுக்களின் அந்துப்பூச்சிகள் கவரப்பட்டு இனச்சேர்க்கை தவிர்க்கப்படும். மஞ்சள் வண்ண ஒட்டு அட்டைகளில் கிரிஸ், விளக்கெண்ணெய் தடவி எக்டருக்கு 25 இடங்களில் வைத்தால் தத்துப் பூச்சி, வெள்ளை ஈ, அசுவினி, இலைப்பேன்கள் விழுந்து மடியும்.
பருத்தி காட்டில் இரவு 7:00 முதல் 11:00 வரை விளக்கு பொறி வைத்தால் ஒளியினால் தத்துப்பூச்சி, காய்ப்புழுக்களின் அந்துப்பூச்சிகள் கவரப்பட்டு அழியும். எக்டருக்கு 12 விளக்குப்பொறிகள் வைக்க வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாணத்தை கலந்து விதைநேர்த்தி செய்தால், வேரழுகல் நாற்றழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். ஒரு முறைக்கு 10 ஆயிரம் வீதம் 6 முறை டிரைக்கோடெர்மா ஒட்டுண்ணிகளை விதைத்த 40 நாளில் இருந்து 15 நாள் இடைவெளியில் விட வேண்டும். இந்த ஒட்டுண்ணிகள் காய் புழுக்கள், முட்டைகள் மீது தன் முட்டைகளை இட்டு அவற்றை கட்டுப்படுத்துகிறது.
மேலும் தகவலுக்கு
பானு பிரகாஷ்,
வேளாண்மை உதவி இயக்குனர்
நயினார்கோயில், ராமநாதபுரம்,
94430 90564
மேலும் படிக்க
சொட்டுநீர்ப் பாசன கருவிக்கு 100% மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
ஊரடங்கில் உருவான இயற்கை விவசாயி! உரிய விலை கிடைக்க வியாபாரமும் செய்கிறார்!
Share your comments