விருத்தாசலம் அறிவியல் நிலையம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடுதுறை 53, 54 நெல் ரகங்கள் பயிரிடப்பட்ட அயன் குறிஞ்சிப்பாடி விவசாயிகளின் நெல் வயல்களை, கோவை வேளாண் பல்கலை விரிவாக்க கல்வி இயக்குனர் ஜவகர்லால் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். அப்போது சீரக சம்பாவில் குறுகிய கால பயிராக மேம்படுத்தப்பட்ட விதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளைத் தேடி வந்து உதவும் வேளாண் துறையின் புதியத் திட்டம்!
மண்புழு உரம்:
விவசாயிகளுக்கு மண்புழு உரம் (Earthworm compost) வளர்க்கும் உறைகளை இயக்குனர் ஜவகர்லால் வழங்கினார். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், பேராசிரியர்கள், பாஸ்கரன், மருதாச்சலம், நடராஜன், பொற்கொடி, பாரதிகுமார், செந்தில்குமார், குறிஞ்சிப்பாடி வேளாண் இணை இயக்குனர் அனுசுயா ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலைச்செல்வன், மகாதேவன் செய்திருந்தனர். அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம், விவசாயி குப்புசாமி உடனிருந்தனர்.
மண் பரிசோதனை
வேளாண் இயக்குனர் ஜவகர்லால் விவசாயிகளிடம் கூறுகையில், கொரோனா காலத்தில் பெரிய இழப்பு ஏற்படாத ஒரே துறை விவசாயம் (Agriculture) மட்டுமே. விருத்தாசலம் அறிவியல் நிலையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களை விவசாயிகள் சந்தித்து பயன்பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மண் பரிசோதனை (Soil Test) செய்ய வேண்டும்.
தோட்டக்கலைத் துறையின் புதிய பரிசுத் திட்டம்! பசுமைப் பரிசு பெட்டகம்!
விதை அறிமுகம்:
அறிவு சார்ந்து விவசாயம் செய்தால் தான் வெற்றி பெற முடியும். சீரக சம்பாவில் குறுகிய கால பயிராக மேம்படுத்தப்பட்ட விதை அறிமுகம் (Seed Intro) செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர் கீழே சாயாது. விவசாயிகள் சாகுபடி செய்து பார்க்க வேண்டும். நோய் பாதிப்பு வந்தால் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேளாண் துறையை விவசாயிகள் அணுகினால் தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தோட்டக்கலைத் துறையின் புதிய பரிசுத் திட்டம்! பசுமைப் பரிசு பெட்டகம்!
சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளைத் தேடி வந்து உதவும் வேளாண் துறையின் புதியத் திட்டம்!
Share your comments