புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடிக்கு செய்வோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தொடரும் நோய்கள் (Continuing diseases)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. ரசாயனங்களைக் கொண்டு விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுவதால்தான். பல்வேறு நோய்களும், நம்மைத் தொடர்கின்றன.
இதன் விளைவாக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே நஞ்சில்லா உணவு என அழைக்கப்படும், அங்கக வேளாண்மை , அதாவது இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே பரவி வருகிறது.
இயற்கை விவசாயம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி விளைவிக்கப்படும் விளைபொருள்களுக்கு தமிழ்நாடு அரசின் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அங்கக விளைபொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
மானியம் (Subsidy)
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் கீரை வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500ம், வெண்டை, கத்தரி, தக்காளி போன்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750ம் வழங்கப்பட்டு வருகிறது.
சான்றுக்கு ரூ.500 (Rs.500 per certificate)
இயற்கை முறையில் காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று பெறுவதற்கு ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது
மேலும் விவரங்களுக்குப் புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் மற்றும் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !
Share your comments