விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளையும் பொருட்களை இடை தரகர்கள் இன்றி மலிவான விலையில் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் 1999 ஆம் ஆண்டு தொடக்கிவைத்த உழவர் சந்தை திட்டம் தற்போது வரை வெற்றிகரமாக செயல்படுகிறது.
எப்பொழுதும் வியாபாரிகள் இடைத் தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்று விவசாயிகளை விட அதிக லாபம் சம்பாரித்தனர். அதனால் ஏழைகளுக்கு காய்கறிகள் உணவு அரிதாகவே இருந்தது. மேலும் குழந்தைகளுக்கு சத்து குறைபாடுகளும் பெண்களுக்கு ரத்த சோகை போன்ற பிரச்சனைகளும் அதிகம் காணப்பட்டது.
பின்பு 1999 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் தொடங்கிய உழவர் சந்தை திட்டத்தினால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகள்,பழங்கள்,தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தைத் திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் புதிதாக திறக்கப்பட்டது. இந்த உழவர் சந்தை திட்டம் 1999 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 19 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலையை விட உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை மலிவாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றது.
தற்போது வரை தமிழகத்தில் 180 உழவர் சந்தைகள் உள்ளன. இந்த உழவர் சந்தைகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. உழவர் சந்தைகள் ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் 4 முதல் 10 ஊழியர்களுடைய கண்காணிப்பில் பெரிய வர்த்தமாகவே செயல்பட்டு வருகின்றன.
மேலும் விவசாயிகள் தங்களது விலை பொருட்களை சந்தைகளுக்கு எடுத்து வருவதற்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் குறிப்பிட்ட நேரங்களில், உழவர் சந்தை தொடங்கும் நேரத்தில் அதிகாலையில் உழவர் சந்தைக்குப் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.
கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பதை தடுக்க சந்தையின் 4 இடங்களில் விலைப்பட்டியல் பலகை வைக்கப்படுகின்றன. இந்த விலைகளை நியமிக்கப்பட்ட குழு நாள்தோறும் முடிவு செய்கிறது.
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த உழவர் சந்தை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தினால், மக்கள் விலைவாசி உயர்விலிருந்து தப்பிக்க முடியும் என மக்களவை, மாநிலங்களவையில் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
உழவர் சந்தையின் வாயிலாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தமுடியும் என்றும் இந்தியா முழுவதும் தமிழகத்தைப் போல் உழவர் சந்தைகள் துவக்கப்பட வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
மேலும் படிக்க:
உழவர் சந்தை நிர்வாகத்தின் பாராட்டதக்க புதிய முயற்சி, நாமும் பின்பற்றலாமே
விவசாயிகளுக்கு இலவச கோகோ செடி கன்று!
உழவர் கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
Share your comments