தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பெயலைச் சூட்ட, உயர் கல்வி துறையில் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தலைவர்கள் பெயர் (Name of leaders)
பொதுவாக பல்கலைக்கழகங்களுக்கு, அவற்றின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த முன்னாள் முதல்வர்களின் பெயரைச் சூட்டுவது வழக்கம். குறிப்பாக அந்த முதல்வர்கள் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வரும்போது இத்தகை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
திமுகவினர் ஆதங்கம்
அவ்வாறு, ஜெயலலிதா பெயரில் மொத்தம் மூன்று பல்கலைகள் உள்ளன. ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் எதுவும் இல்லை என்பது திமுகவினரின் நீண்ட நாள் ஆதங்கமாகவே உள்ளது.
இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அக்கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெயர் வைக்க முடிவு (Decided to put the name)
இதன் அடிப்படையில், மாநிலத்தில் இயங்கிவரும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்திற்கு, கருணாநிதியின் பெயரைச் சூட்டலாம் என முடிவு செய்யப்பட்டது.
அரசு திட்டம் (Government program)
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற முதற்கட்ட ஆலோசனையில், கோவையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்குக் கருணாநிதி பெயர் வைக்கலாம் எனத் திட்டமிடப்பட்டு உள்ளது.
மனுக்கள் அளிப்பு (Submission of petitions)
இது குறித்து வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், அக்ரி மாதவன் தலைமையில், முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி செயலருக்கும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பல்கலை அந்தஸ்து (University status)
கோவை வேளாண் பல்கலைக்கழகம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் பல்கலை அந்தஸ்து பெற்றதால், அதற்கு கருணாநிதியின் பெயர் வைக்க ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்குக் கருணாநிதி பெயர் சூட்டும் அறிவிப்பு விரைவில் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
மேட்டூர் கால்வாயில் 13 ஆண்டுகளுக்கு பின் பாசனத்திற்கு நீர் திறப்பு
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!
Share your comments