1. விவசாய தகவல்கள்

Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Kisan Call Centre- TNAU

விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் கிசான் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் எப்படி அணுகுவது, அவற்றின் செயல்பாடுகள் என்ன போன்ற பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார் அக்ரி சு. சந்திரசேகரன். அவற்றின் விவரம் பின்வருமாறு-

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் மற்றும் அதை சார்ந்த கால்நடை வளர்ப்பு, கோழிவளர்ப்பு, மீன்வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் பட்டுபூச்சி வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபடும் விவசாயிகள் அவ்வப்போது ற்படும் பிரச்சனைகளுக்கு யாரை அணுகுவது, இதற்கு தீர்வு காண்பது எப்படி என வழித்தெரியாமல் உள்ளனர்.

Kisan Call Centre:

விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களுக்கு தீர்வு காணவே இந்திய வேளாண்மை அமைச்சகம் நாடு முழுவதற்கும் விவசாயிகளின் அவரவர் தாய் மொழியில் கிசான் கால் சென்டரினை (Kisan Call Centre) கடந்த ஐனவரி 21, 2004-ல் தொடங்கியது. தொடர்ந்து 20 வருடங்களாக இவை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

KCC-யின் செயல்பாடுகள்:

இன்றைய கால கட்டத்தில் விவசாயம் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பண்டைய கால வேளாண் முறைகள் வழக்கொழிந்து புதிய புதிய தொழில்நுட்பங்கள் (TECHNOLOGY) வேளாண்மையிலும் அதனை சார்ந்த துறைகளிலும் வந்துக்கொண்டே இருக்கின்றன. விவசாயிகள் அதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள ஒருவகையில் Kisan Call Centre பெரிதும் உதவுகிறது.

KCC: எவ்வாறு அணுகுவது?

வாரத்தில் 7 நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீங்கள் கிசான் கால் செண்டரினை தொடர்புக் கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு சரியான தீர்வு காணலாம். மாநிலத்தின் எந்த பகுதியிலிருந்தும் கட்டணமில்லாத அலைபேசி எண் (1800-1801-551) என்கிற 11 இலக்க எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்கலாம் .

கிசான் சென்டரில் உள்ள ஆப்ரேட்டர்கள் விவசாயிகளின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் (FARM TECHNOLOGY ADVICER) மூலமாக சரியான தீர்வுகளை வழங்குவார்கள். உதாரணத்திற்கு பயிரில் திடீரென்று காணப்படும் பூச்சி / நோய் தாக்குதலுக்கான தீர்வு மற்றும் இதர சாகுபடிக்கான தொழில்நுட்ப தகவலையும் கிசான் கால் சென்டர்கள் மூலம் பெற இயலும்.

KCC- தனியார் நிறுவனங்களின் பங்கு:

இதுப்போன்ற கிசான் கால் சென்டர் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கும் நிலையில், தனியார் தொண்டு நிறுவனங்களும் (RELIANCE FOUNDATION) இலவச HelpLine மூலம் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கி வருகின்றனர். கட்டணமில்லாத அலைபேசி (1800-419-8800) என்ற எண்ணினை அழைத்தால் போதும். மறுமுனையில், வேளாண் தொடர்பான உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொழில் முறை வல்லுநர்கள் சிறந்த ஆலோசகளை வழங்குவார்கள்.

(கிசான் கால் செண்டர் தொடர்பான மேலும் தகவலுக்கு அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களை (94435 70289) தொடர்புக் கொள்ளலாம்).

Read more:

பூசா பாஸ்மதி 1979- பூசா பாஸ்மதி 1985 அரிசி வகைகளின் விதை விற்பனை தொடக்கம்!

இஸ்ரேலிய முறையில் அவகேடோ சாகுபடி- ஆண்டுக்கு 1 கோடி வருமானம்!

English Summary: Kisan Call Centre given Solution to agricultural problems in toll free phone call Published on: 27 May 2024, 11:24 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.