1. விவசாய தகவல்கள்

கிசான் ரத் செயலி: விளைப்பொருட்களை கொண்டு செல்ல உதவும்

Deiva Bindhiya
Deiva Bindhiya

Kisan Rath App: Helps to carry Agri products

விவசாயிகளின் விளைப்பொருட்கள் வீணாகாமல் வியாபாரிகள் மற்றும் நுகர்வோரை சென்றடையும் வகையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய வேளாண் அமைச்சர் "கிசான் ரத்" (‘Kisan Rath App’) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உபயோகத்தில் இருப்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் இது குறித்த முழுமையான விரிவான விளக்கத்தை, இந்தப் பதிவில் காணலாம்.

கிசான் ரத் செயலி (Kisan Rath App)

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை, விவசாயிகளின் நலனுக்கான பல செயலிகளை உருவாக்கியுள்ளது. அதில் குறிப்பாக கிசான் ரத் செயலியின் நோக்கம் மற்றும் பயன் என்ன? தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தச் செயலி, விவசாய மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை போக்குவரத்து வாகனங்களைத் தேடும் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலியாகும்.

விளை நிலங்களில் இருந்து மண்டிகள், விவசாய உற்பத்தி அமைப்பின் சேகரிப்பு மையங்கள், உணவுக் கிடங்குகளுக்கு பொருள்களைக் கொண்டு செல்வது உள்ளிட்டவை முதல்நிலை போக்குவரத்துகளில் இடம்பெறுவனவாகும். மண்டிகளில் இருந்து பொருள்களை மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலான மண்டிகள், பதப்படுத்தும் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் அதாவது குடோன்கள், மொத்த விற்பனையாளர்களுக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை இரண்டாம் நிலை போக்குவரத்தாகும் என்பது குறிப்பிடதக்கது.

சாகுபடியும், அறுவடையும் தொடர்ந்து நடக்கும் போது, கிசான் ரத் செயலி, விளையும் இடத்திலிருந்து மண்டிக்கும், அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள பிற மண்டிகளுக்கும் பொருள் போக்குவரத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் உதவும் என்பதால், பொருள் போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும் என்பது இதன் சிறபம்சமாகும்.

இந்த கிசான் ரத் செயலி, நாட்டில் விவசாயிகள், விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், தங்களது விளைபொருள்களை நிலத்தில் இருந்து மண்டிகளுக்கு கொண்டு செல்ல பொருத்தமான போக்குவரத்து வசதியைத் தேர்ந்தெடுக்க உதவும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க: விவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகள் - ஓர் பார்வை!

உணவு தானியங்கள் ( தானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவை), பழங்கள் மற்றும் காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், மசாலாப் பொருள்கள், நார்ப் பயிர்கள், பூக்கள், மூங்கில், கட்டைகள் மற்றும் சிறு வன உற்பத்திப் பொருள்கள், தேங்காய்கள் போன்ற விவசாய உற்பத்திப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கான சரியான போக்குவரத்து முறையைக் கண்டறிய விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் ‘’கிசான் ரத்’’ எனப் பெயரிடப்பட்டுள்ள கைபேசி செயலி உதவக்கூடியதாகும் என்பது குறிப்பிடதக்க அம்சங்களாகும். அழுகக்கூடிய பொருள்களைக் கொண்டு செல்லும் பதப்படுத்தும் வசதி கொண்ட வாகனங்களை வணிகர்கள் தேர்வு செய்வதற்கும், இந்தச் செயலி பயன்படும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க: ICAR Recruitment: பட்டதாரிகள் கவனத்திற்கு, ரூ 44.000 சம்பளம்! விவரம் உள்ளே

இந்தச் செயலி ஆன்ட்ராய்டு வடிவில், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி, பஞ்சாபி, தமிழ், கன்னட், தெலுங்கு ஆகிய 8 மொழிகளில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, இந்தியா முழுவதிலும் பயன்பாட்டில் இருப்பதும் குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

மக்களை தேடி மருத்துவம்: கூடுதலாக 256 நடமாடும் மருத்துவ சேவை துவக்கம்

பேருந்து கட்டண உயர்வு குழப்பம்: போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

English Summary: Kisan Rath App: Helps to carry Agri products

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.