1. விவசாய தகவல்கள்

உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க உதவும் கிசான் விகாஸ் பத்ரம் - சிறந்த சேமிப்புத் திட்டம்

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

credit by News Nation

கையில் உள்ள பணத்தை அடுத்த சில ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி, மகனின் உயர்கல்விச் செலவையோ, மகளின் திருமணச் செலவையோ எதிர்கொள்ளத் திட்டமிடுபவரா நீங்கள்? அப்படியானால், கிசான் விகாஸ் பத்ரம் திட்டம் உங்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும்.

கடன் வாங்காமல், வரும் வருமானத்திற்குள் சிக்கனமாகக் குடும்பத்தை ஓட்டுவது என்பது சவால் மிகுந்த ஒன்றுதான். ஆனால் உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அதிலும், வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்க வேண்டியதுக் கட்டாயம்.

ஆசைப்படும் பொருட்கள் அனைத்தையும், மாதத்தவணையாக செலுத்தும் வகையில் வாங்கிக்கொண்டு, ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சாத்தியமாவது சற்று சிக்கலே.

அதேநேரத்தில் கடன் வாங்காமல், வாழ்க்கையை ஓட்டவேண்டும். எந்தப் பொருளை வாங்க நினைத்தாலும், அதற்கானத் தொகையை சிறுசிறுகச் சேமிப்பதுடன், ரொக்கப்பணமாக செலுத்தி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சேமிப்பு இரட்டிப்பாகிறது (Amount Double)

அதிலும் நம் சேமிப்பு இரட்டிப்பாகிறது என்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தானே. இத்தகைய சேமிப்பு, பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கும், இன்னும் பத்து வருடங்களில் ஓய்வு பெறவிருப்பவர்களுக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

இனி கிசான் விகாஸ் பத்ரம் பற்றி தெரிந்து கொள்வோம்.

credit by DNA India

கிசான் விகாஸ் பத்ரம் திட்டம் (Kisan Vikas Patra)

விவசாயிகள் வங்கிகளை அணுகுவதில் நீடித்து வந்த சிக்கலைப் போக்கும் வகையில் கடந்த 1988-ம் ஆண்டு கிசான் விகாஸ் பத்ரம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இது மிகப் பிரபலமான ஒரு சேமிப்புத் திட்டமாக வளர்ந்து வந்தது. எனினும், 2011ம் ஆண்டு முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகார் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் அறிமுகம்

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இதில் மேலும் பாதுகாப்பு அம்சங்களைப் புகுத்தி மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

பாதுகாப்பான சேமிப்பு திட்டம்

பாதுகாப்பான சேமிப்பு, (guarantees secured investment) எதிர்காலத்தில் லாபகரமான வருமானம் (Profitable returns)ஆகியவற்றைத் தரும், இந்த தி ட்டத்திற்கான வட்டி சதவீதத்தை மத்திய அரசு காலாண்டின் அடிப்படையில் அறிவிக்கும்.

அதிகபட்ச தொகை(Maximum Limit)

இதில் சேமிக்க விரும்புபவர்கள், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல், நூறின் மடங்காக, அதிகபட்சம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலுத்தலாம். அதிகபட்சத் தொகைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்பட வில்லை.

இந்த சேமிப்பு திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு ஆண்டுக்கு 6.9 சதவீதம் வட்டி வீதம் தற்போது அளிக்கப்படுகிறது. 124 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து நீங்கள் செலுத்தும் தொகை இரட்டிப்பாகிறது.

தகுதி (Eligibility)

18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்த திட்டத்தில் சேமிக்கத் தகுதி பெற்றவர்கள்.ஒரு இளைஞர் அல்லது இளம் பெண் பெயரிலோ அல்லது, அதிகபட்சம் 3 பேர் இணைந்தோ இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம்.

credit by Jagran Josh

விண்ணப்பிப்பது எப்படி?(How to apply)

கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம்.

மைனர் பெண் அல்லது சிறுவர்களின் பெயரில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முதலீடு செய்யலாம்.

அறக்கட்டளைகளும் கிசான் விகாஸ் திட்டத்தில் சேமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால், இந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.

பாஸ்புக்(Passbook)

கிசான் விகாஸ் பத்ரம் திட்டத்தில் இணைந்தவுடன் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று அதற்கான பாஸ்புக்கை (Passbook) முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் எதிர்பாராத வகையில், மரணமடையும் பட்சத்தில், அவரால் பரிந்துரைக்கப்பட்ட உறவினர் அல்லது மற்றவர்கள், முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்கான வசதியும் உண்டு.

முதலீட்டாளர் விரும்பினால், இந்த சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.

ஒருவேளை முன்கூட்டியேப் பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு இந்தத், திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். பணத்தைப் பெறும் நாள்வரை வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

பான் எண் (Pan Number)

அதிக மதிப்பிலான தொகையினை முதலீடு செய்யும் போது பான் எண் கட்டாயம்.

வரி விலக்கு கிடையாது(No tax Relaxation)

கிசான் விகாஸ் பத்ரம் திடத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை.

ஆன்லைனில் விண்ணப்பம் (Online)

இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை - https://www.indiapost.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தோடு உங்களுடைய அடையாள அட்டைக்கான ஆவணம் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது


  • ஆதார்அட்டை (Aadhaar Card)

  • ஓட்டுநர் உரிமம்(Driving Licence)

  • பாஸ்போர்ட் (Passport)

  • இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)

  • பான் கார்டு (PAN Card)

ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

மழையைக் காசாக்க நீங்க ரெடியா?- அப்படியென்றால் இது உங்களுக்கான டிப்ஸ்!

கால்நடை விவசாயத்தை லாபகரமாக மாற்ற சில டிப்ஸ்!!

English Summary: kisan Vikas Patra Scheme make Double your Investment in 124 months

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.