PM கிசான் 13வது தவணை நிலையை ஆன்லைனில் எவ்வாறு சரிபார்ப்பது, விதைப்பண்ணை அமைக்க அரசு மானியம் எவ்வளவு?, TNAU-வின் 2 நாள் பயிற்சி போன்ற தகவல்கள் கீழே பின்வருமாறு:
1.PM கிசான் 13வது தவணை; ஆன்லைனில் பெயரை சரிபாருங்கள்
அனைத்து PM கிசான் பயனாளிகளும் 13வது தவணையைப் பெற, அவர்களின் கணக்கு eKYC இணக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும். eKYC ஐ முடிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 10, 2023 என்று முன்பே தெரிவிக்கப்பட்டியிருந்தது. இதன் படி தற்போது, தற்போது பயனாளர்களின் பட்டியலில் பெயரை சரிபார்க்க விவசாயிகள் செய்ய வேண்டியது.
1. அதிகாரப்பூர்வ PM KISAN இணையதளத்தைப் பார்வையிடவும் https://pmkisan.gov.in/.
2. இந்தியாவின் வரைபடத்தின் மேலே உள்ள மஞ்சள் நிற தாவலான "டாஷ்போர்டு"க்கு செல்லவும். ஒரு புதிய பக்கம் திறக்கும்.
3. அந்தந்த மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும். காண்பி பொத்தானைக் கிளிக் செய்யவும். பட்டியல் திறக்Value கும் இந்த பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்க்கலாம்.
2.விதைப்பண்ணை அமைக்க இதோ அரசின் மானியம்
ஒரு விசாயக் குடும்பத்திற்கு அதிகபட்சமாக நெல்லில் 5 ஏக்கரும் இதர பயிர் விதைகளில் 12.5 ஏக்கரும் விதைப்பண்ணையாக பதிவு செய்யலாம். விதை உற்பத்தி செய்து சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைத்தவுடன் குறைந்த பட்ச ஆதார விலையில் 80% முதல் தவணை நேரடியாக விவசாயிகளின் வங்கிகணக்கில் வழங்கப்படும். மீதமுள்ள தொகை டான்சிடா கொள்முதல் விலையின் படி இரண்டாம் தவணை சுத்திகரிப்பு முடிந்து விதை ஆய்வு முடிவில் தேர்ச்சி பெற்றவுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகுங்கள்.
3.காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்குக-விவசாயிகள் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 16 ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாயிகள், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றி மற்றும் குரங்குகள் பெருமளவில் சேதப்படுத்தி வருகின்றன. எனவே, காட்டுப்பன்றிக்கு வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தற்போது அறுவடை நடைபெற்று வருவதால், மார்ச் மாதம் 30-ந் தேதி வரை பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
4.பூண்டி நீர்த்தேக்க உயரத்தை 2 அடி அதிகரிக்க திட்டம்
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 35 டி.எம்.சி., இதில் 2 அடி உயர்த்தும் பணிகள் தற்போது துவங்கி உள்ளன. நீர்த்தேக்கத்தை சுற்றி, ஆறு இடங்களில் இந்த மண் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதனால் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். பின்னர் அடுத்தடுத்த பணிகள் துவங்கும். என நீர்வள ஆதாரத்துறையை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.சென்னையில் உள்ள நியாய விலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC), உணவுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து, சென்னையில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம், முன்னுரிமை குடும்பம் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) கார்டுதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தைத் தொடங்கவுள்ளது. குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நாள்பட்ட இரத்த சோகையை எதிர்த்துப் போராடுவதற்கு முன்முயற்சி எடுக்கப்பட்டது. மேலும் அரிசியின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதை சமைக்கும் முறை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இத்துறை ஏற்பாடு செய்துள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, வலுவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் பி 12 போன்ற வைட்டமின்கள் உள்ளன, அவை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமானவை. சென்னையில் 7.50 லட்சம் PHH மற்றும் AAY கார்டுதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
6.TNAU: சிறுதானியத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி
சிறுதானியத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்த பயிற்சியை TNAU நடத்துகிறது, “சிறுதானியத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பயிற்சி கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 22பிப்ரவரி மற்றும் 23பிப்ரவரி 2023ஆகிய தேதிகளில் நடத்தப்படும். ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அச்சிறப்பு மிக்க இந்த உணவு நம் அன்றாட உணவில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. சிறுதானியங்கள் அதிக சத்தானது மற்றும் இதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த பயிற்சியின் மூலம் தொழில்முனைவோருக்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். பயிற்சித் திட்டத்தில் பின்வருவன இடம்பெறும்:
- பாரம்பரிய உணவுகள்
- பாஸ்தா உணவுகள்
- பேக்கரி பொருட்கள்
- உடனடி உணவு கலவைகள்
ஆர்வமுள்ள நபர்கள் ரூ.1,770/- (1500/+ GST 18%) - பயிற்சியின் முதல் நாள் நேரில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
PM Kisan : 13வது தவணை நிலை விவரங்களை இவ்வாறு சரிபார்க்கலாம், முழுமையான தகவல் இதோ!
100 நாள் வேலை உறுதித்திட்டம் பலிகடா-எம்பி ராகுல் காந்தி கண்டனம்
Share your comments