குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் 50% மானியத்தில் வேளாண் இடுபொருட்களைப் பெற விண்ணப்பிக்குமாறு, விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு (CM Announced)
2021ம் ஆண்டில் குறுவை பருவ நெல் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தவும் குறுவைதொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
2 ஏக்கர் விவசாயிகள் (2 acres farmers)
இத்திட்டம் டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்துக் குறுவை சாகுபடி செய்யும் கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. குறுவைத் தொகுப்பு திட்டத்தில் விதைநெல், உரங்கள், பசுந்தாள் உர விதைகள் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை விவசாயிகள் பயன்பெறலாம்.
20கிலோ விதைநெல் (20 kg of paddy)
இந்தக் குறுவை தொகுப்பு திட்டத்தில் ஏக்கர் ஒன்றுக்கு விதை நெல் 20 கிலோ 50% மானிய விலையில் வழங்கப்படும். இதேபோல் ரூ1400 மதிப்புள்ள 20கிலோ பசுந்தாள் உர விதைகளும், ரூ.2185 மதிப்புள்ள உரங்களான யூரியா 2 மூட்டை, டி.ஏ.பி 1 மூட்டை மற்றும் பொட்டாஷ் அரை மூட்டையும் வழங்கப்படும்.
100% மானியத்தில் உரங்கள் (Fertilizers at 100% subsidy)
அரியலூர் மாவட்டத்திற்குக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் விதை நெல் 40 மெட்ரிக் டன், 2600 ஏக்கரில் 100 சதவீத மானியத்தில் உரங்கள் மற்றும் பசுந்தாள் உர விதைகள் வாங்கிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகள் தேர்வு (Beneficiaries selection)
மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட வேளாண் பொறியியல்துறை மூலம் பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்படும். இத்திட்டம் தொடர்பாக டெல்டா கிராமங்களில் விஏஓ அலுவலகம் அல்லது பஞ்சாயத்து அலுவலகங்களில் ஜூன் 24(இன்று),25, மற்றும் 26ம் தேதிகளில் பயனாளிகள் தேர்வும், விண்ணப்பம் பெறும் முகாமும் நடத்தப்படும்.
விண்ணப்பம் (Application)
எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் அல்லது விஏஓ அளிக்கும் சாகுபடிச் சான்று ஆகியவற்றை உதவி வேளாண்மை அலுவலரிடம் அளித்து விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
தொடர்புக்கு (For Contact)
குறுவை தொகுப்பு திட்டத்திற்கு அரியலூர், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை அலுவலர் கோபாலக்கிருஷ்ணன் வாட்சப் எண் 9566534432க்கு ஏதேனும் விபரங்கள் அல்லது குறைகளுக்கோ விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
உதவி மையங்கள் (Help Centers)
மேலும், திருமானூர் வட்டாரத்தில் கீழப்பழூவூரில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், தா.பழூரில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் மீன்சுருட்டி, துணை வேளாண்மை விரிவாக்க மையத்திலும் இத்திட்டத்திற்காக உதவி மையம் செயல்படும்.
ஆட்சியர் அழைப்பு (Call the Collector)
இத்திட்டத்தில் சேர விரும்பும் டெல்டா பகுதி விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன் பெறுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
வண்டுகள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனை
ஒரு பழத்தின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை,மத்தியப் பிரதேசத்தின் 'நூர்ஜஹான்' மாம்பழங்கள்.
Share your comments