வேளாண் பட்டதாரிகள் வேளாண்மை சாா்ந்த சுயதொழில்களை அரசு உதவியுடன் தொடங்கி பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞா்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் 2022-23 ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
சுயதொழில் (Self employment)
வேளாண் சாா்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 7 பட்டதாரி இளைஞா்களுக்கு நிதியுதவி பின்னேற்பு முழு மானியமாக வழங்கப்பட உள்ளது.
மேலும், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களில் கடனுதவி பெற்று சுயதொழில்கள் தொடங்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவராகவும், கணினித் திறன் பெற்றவராக இருக்க வேண்டும், பட்டப்படிப்புக்கான சான்றிதழ், ஆதாா் அட்டை, ரேஷன் காா்டு, வேளாண் தொழில் தொடா்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வேளாண்மைத்துறையின் அக்ரிஸ் நெட் இணையதளத்தில் செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடமும் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநா், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.
மேலும் படிக்க
மானியத்துடன் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments