மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சாத்தையாறு அணை முறை சார்ந்த கண்மாய்களுக்கு இன்று 12 அக்டோபர் 2022 முதல் 25 கனஅடி/வினாடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சாத்தையாறு அணை முறை சார்ந்த கண்மாய்களின் கீழ் உள்ள 1029 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பது குறிப்பிடதக்கது.
2.விவசாயிகளிடமிருந்து அதிக ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசின் அனுமதியை கோருகிறது மாநில அரசு
மழை காரணமாக, இந்த பருவத்தில் அதிக ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கோரியுள்ளது. இந்த வாரம் டெல்டா மாவட்டங்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளதாக, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். "விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் 22% ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோருகிறோம்," என்று அவர் கூறினார். இவ்விவகாரத்திற்கு மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க:22% ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை
3.சென்னையில் வேலைவாய்ப்பு முகாம், 300க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 15 அக்டோபர் 2022 அன்று இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வரை கலந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: அக்.15 சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: விவரம் உள்ளே
4.TNAU: பேக்கரி மற்றும் மிட்டாய் பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி
"பேக்கரி மற்றும் மிட்டாய் பொருட்கள் தயாரித்தல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி நடக்கவுள்ளது. 13. அக்டோபர் .2022 மற்றும் 14 அக்டோபர் 2022, அன்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) நடைபெறும். பேக்கரி பொருட்கள் அதன் வசதி, வகை, கிடைக்கும் தன்மை போன்ற காரணங்களால் பிரபலமடைந்து வருகிறது. தனித்துவமான சுவை. பேக்கரி தொழில் வளர்ச்சியானது சுயதொழில் செய்வதற்கான வழிகளை உருவாக்க உதவும். தொழில்முனைவோருக்கு திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு நாள் பயிற்சிக்கு கட்டணமாக ரூ. 1770 வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: TNAU: பேக்கரி மற்றும் மிட்டாய் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி
5.தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் GITEX கண்காட்சியில் இடம்பெறும்
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள GITEX கண்காட்சியில் பங்கேற்கிறார். பருவநிலை மாற்றும், உலக வெப்பமயமாதல் போன்ற பெரும் சவால்களைத் தொழில்நுட்பம் மூலம் குறைப்பது குறித்து விவாதிக்க, இந்தக் கண்காட்சியும், மாநாடும் உதவும். இது போன்ற பெரும் இடர்பாடுகள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்த விவரங்கள், இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் இடம் பெரும் என்பது குறிப்பிடதக்கது.
6.வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் தொடர்பான மாநாடு: நரேந்திர சிங் தோமர் பங்கேற்பு
வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட விதைகள் மற்றும் வேளாண் இடுபொருட்களின் ஒருங்கிணைப்பு தொடர்பான தேசிய மாநாடு 12 அக்டோபர் 2022 அன்று புது தில்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இங்கு தலைமை விருந்தினராக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வானது இந்திய அரசாங்கத்தின் தரமான விவசாய இடுபொருட்களை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட வேளாண் உள்ளீடுகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்துதல், நவீன வேளாண்மைப் பழக்கவழக்கங்களுக்கான விழிப்புணர்வு, விவசாய வணிகத்தை மேம்படுத்துதல், ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. இந்நிகழ்விற்கு பத்திரிக்கை தொடர்பாளராக கிரிஷி ஜாக்ரன் இணைந்துள்ளது குறிப்பிடதக்கது.
7.பான்-ஆசியா உழவர் பரிமாற்றத் திட்டம், வேளாண் துறையில் பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்
கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர், எம்.சி. டொமினிக், அக்டோபர் 10 முதல் பிலிப்பைன்ஸில் நடந்து வரும் பான்-ஆசியா உழவர் பரிமாற்றத் திட்டம் மற்றும் FX Program 16வது பதிப்பில் கலந்துகொள்ளும் மதிப்பிற்குரிய பங்கேற்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. அக்டோபர் 14, 2022, விவசாயத் தாவர உயிரித் தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிவைப் பகிர்வதற்கும் பரிமாற்றத்துக்கும் இது ஒரு முக்கிய தளமாகும், இது பயோடெக் பயிர்களைப் பற்றிய விவசாயிகளின் தலைவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஊடகங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது சிறப்பாகும். இந்நிகழ்வில் கிரிஷி ஜாக்ரன் தலைமை ஆசிரியர் எம்.சி.டாம்னிக், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் படிக்க:
பான்-ஆசியா விவசாயிகள் பரிமாற்றத் திட்டம்; விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!
PM Kisan புதிய அப்டேட் | தமிழக அரசு 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு | Pan Asia | Pragatisheel
Share your comments