"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" - தமிழக மக்கள் நோயற்று வாழ தமிழக அரசு தோட்டக்கலை துறையின் மூலம் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மூலிகை தோட்டம் அமைக்க, 1,500 ரூபாய் மதிப்புள்ள மூலிகை தொகுப்பு, 50 சதவீத மானியத்தில், 750 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
வகைக்கு 2 வீதம், துளசி, திருநீற்றுபச்சிலை, வல்லாரை, கற்பூரவல்லி, கற்றாழை, பிரண்டை, கீழாநல்லி, ஆடாதொடை, திப்பிலி, அஸ்வகந்தா, ஆகிய, 10 வகையான மூலிகைச் செடிகள் வழங்கப்பட உள்ளன.
2.ஏக்கருக்கு ரூ.10,000 விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு
திருவாரூரில் விவசாயிகளுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்) சார்பில் 2022-23ஆம் நிதியாண்டில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வழங்க ரூ.1 கோடி செலவில் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது.
3.பனையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க 50% மானியம்!
தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பாக, பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23 ஆம் ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் பனையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் மானிய விலையில் கிடைக்கப்பெறுகிறது. ஒரு அலகிற்கு 50 சதவீதம் மானியமாக ரூ.4000/- வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம்: http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/index.php
4.தமிழகத்தில் அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுக்கக்கோரி விவசாயிகள் விநாயகரிடம் மனு தாக்கல்
கோயம்புத்தூர்: அன்னூர் மற்றும் மேம்பாட்டுப்பாளையம் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனளிக்காத நிலையில், விநாயகர் கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அன்னூரில் இருந்து 13 பெண்கள் உள்பட 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை நகரிலுள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் விநாயகரை தரிசனம் செய்ய அன்னூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். தங்களின் 3,700 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை கையகப்படுத்தி, தொழில் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பதை தடுக்கக் கோரி, அடையாளமாக, கோவில் பூசாரியிடம் மனு கொடுத்தனர்.
மேலும் படிக்க: வீடுகளில் மூலிகை செடி தோட்டம் அமைக்க 50% மானியம்!
5.G20 மாநாடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத் தொடர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் திங்கள்கிழமை புது தில்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற G20 மாநாடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
6.WorldSoilDay கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு
அம்ரித் மஹோத்சவ் மற்றும் உலக மண் தினத்தையொட்டி, ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகத்துடன் இணைந்து NITI ஆயோக் ஏற்பாடு செய்த “நிலையான விவசாயத்திற்கான மண் ஆரோக்கிய மேலாண்மை” குறித்த தேசிய மாநாடு திங்கட்கிழமை புது தில்லி பூசா வளாகத்தில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார்.
7.தை பொங்கல் கொண்டாட்டத்தையோட்டி நம்ம ஊரு திருவிழா ஏற்பாடு
2022-23 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு அல்லது பென் டிரைவ்-இல் பதிவு செய்து, குழுவின் முழு விவரங்களோடு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
8.ஒருங்கிணைந்த விவசாயம் முதலீட்டு போர்ட்டல் உருவாக்கத்தை தொடங்கி வைத்தார் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவர் திருமதி. மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் திங்கள்கிழமை புது தில்லியில் ஒரு சந்திப்பை நடத்தினார். கூட்டத்தில், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஒருங்கிணைந்த "விவசாயம் முதலீட்டு போர்டல்" உருவாக்கத்தை தோமர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில், ஸ்ரீ தோமர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாட்டில் பெண் விவசாயிகளை மேம்படுத்துவதில் அரசு முழு கவனம் செலுத்துி வருவதாகவும் தெரிவித்தார்.
9. '2030க்குள் உரத் துறை' என்ற கருப்பொருளில் கருத்தரங்கு
உலகம் முழுவதும் உரம், விவசாயம் மற்றும் தொழில்துறை கொள்கைகளில் புதிய முன்னேற்றங்கள் வருகின்றன. கிளாஸ்கோவில் நடந்த கட்சிகளின் மாநாட்டில் (COP) 2030 ஆம் ஆண்டிற்குள் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கும், இறுதியில் 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கும் இந்தியா குறிப்பிட்ட காலக்கெடுவை உறுதி செய்தது. அதன்படி, FAI ஆண்டு கருத்தரங்கு 2022 '2030க்குள் உரத் துறை' என்ற கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கை 7 டிசம்பர் 2022 அன்று ஹோட்டல் புல்மேனில் மதியம் 02.30 மணிக்கு இரசாயனங்கள் மற்றும் உரங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், மன்சுக் மாண்டவியா அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
10. திருவண்ணாமலை : கார்த்திகை தீப திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறையில் வேதமந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது . திருவண்ணாமலையில் பிரசித்த பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது . இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
11.மாண்டூஸ் புயல் தமிழகம், ஆந்திரா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்று, வியாழக்கிழமைக்குள் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆறு குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
IMD-இன் சூறாவளி அறிவிப்பு: விவசாயிகள் அச்சத்தில்| TNAU| Agri & Food Startups-க்கு சிறப்பு பயிற்சி
PMFBY| ரூ.10000/- மானிய உதவியில் Electric motor pump set-கள்| ஆவின் பாலகம் நிறுவ 30% மானியம்
Share your comments