"அன்னதாதா தேவோ பவ-கிசான் பகிதாரி பிரத்மிக்தா ஹமாரி" என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தென்னை விவசாயிகளின் நலனுக்காக ஏப்ரல் 26 முதல் மே 1 வரை "அறிவியல் ரீதியான தென்னை சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல்" என்ற தேசிய நிகழ்ச்சியை தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த திட்டத்தை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மெய்நிகர் தளத்தில் தொடங்குவார்.
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தென்னை விவசாய சமூகத்தின் நலனுக்காக தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அளவிலும் 'அறிவியல் ரீதியான தென்னை சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெறும். .
இந்தத் திட்டத்தில் சுமார் 20000 தென்னை விவசாயிகள் ஈடுபடுவார்கள். கிருஷி விக்யான் கேந்திராஸ் (கேவிகேக்கள்), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்), சிபிசிஆர்ஐ, மாநில விவசாயம், தோட்டக்கலை மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் இணைந்து இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, திரிபுரா மற்றும் கோவாவில் நான்கு மாநில அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கேரளா, லட்சத்தீவு, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கோவா, பீகார், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, அசாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகியவை தென்னை சாகுபடிக்கு சாத்தியமுள்ள பகுதிகளாகும். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தென்னை பற்றிய சுமார் 80 கருத்தரங்குகள் நடத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தென்னையில் சிறந்து விளங்கும் மையம், உழவர் பயிற்சி மற்றும் நிர்வாகக் கட்டிடம் ஆகியவை முறையே தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம் தளி மற்றும் தெற்கு திரிபுராவின் ஹிச்சாச்சாரா ஆகிய இடங்களில் திறக்கப்படுகின்றன.
தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் கூடுதலாக, தளியில் உள்ள தென்னையின் சிறப்பு மையம், மேம்படுத்தப்பட்ட தென்னை சாகுபடி தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதையும், நாடு முழுவதும் தென்னை நடவுப் பொருட்களின் முக்கிய ஆதாரமாக/விநியோகஸ்தராக சேவை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. திரிபுராவில் தென்னை பயிற்சி மையத்தை நிறுவுவது தென்னை சாகுபடியின் வளர்ச்சியில், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஒரு முக்கியமான தருணமாகும்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தென்னை சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து சுமார் 80 கருத்தரங்குகள் நடத்தப்படும்.
உணவு, இனிப்பு பானங்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்களை உள்ளடக்கிய தேங்காயின் பல்துறை பயன்பாட்டை நிரூபிக்க, தேங்காய் உற்பத்திகள் பற்றிய மூன்று நாள் மெய்நிகர் வர்த்தக கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படும். இது வருங்கால வாங்குபவர்கள் மற்றும் வர்த்தகர்கள் பல்வேறு தேங்காய் தயாரிப்புகளை சுற்றிப் பார்க்க அனுமதிக்கிறது.
மேலும் படிக்க:
Share your comments