ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, சித்தார்பட்டி, கணேசபுரம், புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி உட்பட பல கிராமங்களில் மொச்சைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை மாதத்திற்கு முன் நடவு செய்த செடிகளில் தற்போது காய்ப்பு அதிகரித்துள்ளது. மொச்சை நடவு செய்த நாளிலிருந்து அடுத்தடுத்து பெய்து வரும் மழை சாதகமாக இருப்பதால் மொச்சைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
மொச்சைக்காய்(Mochaikottai)
ஆண்டிப்பட்டியில் விளையும் மொச்சை ஆண்டிபட்டி மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கொத்தப்பட்டி விவசாயி ஆனந்தகுமார் கூறியதாவது: மொச்சை செடிகளில் ஆறு முதல் 8 மாதம் வரை காய்கள் பறிக்கலாம். செடிகளுக்கு மருந்து செலவு அதிகமாகும்.
செடிகளை நன்கு பராமரித்தால் ஏக்கருக்கு இரண்டு டன் வரை காய்கள் எடுக்க முடியும். கடந்த சில நாட்களுக்கு முன் மொச்சைக்காய் கிலோ ரூ.50 முதல் 60 வரை இருந்தது.
தற்போது விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டில் விலை பாதியாக குறைகிறது. மழையால் விளைச்சல் அதிகரித்தாலும் புழுக்கள் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது.மொச்சைக்காய் கிலோ ரூ.30க்கும் கீழே குறைந்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க
மானியத்துடன் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments