கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர்கடன்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதையும், எவ்வாறு கடனுதவி வழங்கப்படும் என்பதை குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.
"கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை" சென்னை தலைமைச் செயலகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தொடங்கி வைத்தார். மேலும் வேளாண்துறை சார்பில் ரூ. 227 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைத்தவர் கருணாநிதி எனக் குறிப்பிட்டார். கருணாநிதியின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளதையும், அவர் குறிப்பிட்டார். வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை அரசு பெருமைப்படுத்த, முழு முயற்சிகளையும் எடுத்துவருவதாக, அவர் கூறினார். விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்து வருவதையும், அவர் சுட்டிக்காட்டினார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர் கடன்கள் வழங்கப்படும் எனவும், மேலும் கிராமங்கள் தன்னிறைவு பெறும், நகரங்களை நோக்கி நகர்வது குறையும் எனவும் தெரிவித்தார்.
விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும், அவர் தெரிவித்தார். கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு தயார் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதுதவிர சாகுபடியை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
Share your comments