இந்த செய்தி முற்போக்கு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் விவசாயம் தொடர்பான நல்ல பணிகளைக் எடுத்துக்காட்டி ஐந்து லட்சம் ரூபாய் வரை விருது பெறலாம். ஆனால் இப்போது அதற்கு விண்ணப்பிக்க, ஒரு வார கால அவகாசமே உள்ளது, எனவே விரைந்திடுங்கள்.
ஹரியானா அரசால் தொடங்கப்பட்ட 'முக்யமந்திரி பிரகதிஷீல் கிசான் சம்மான் யோஜனா' (Mukhyamantri Pragatisheel Kisan Samman Yojana)-வில் மூலம் இந்த பயனை பெறலாம். இதுமட்டுமின்றி, 88 விவசாயிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் விருதும் கிடைக்கும். மொத்தம் 96 விவசாயிகளுக்கு அரசு ரூ.60,00,000 மதிப்பு விருது வழங்கும். மாநில மற்றும் மாவட்ட அளவில் முற்போக்கு விவசாயிகளை கவுரவிக்கும் திட்டமாக, இது செயல்பட உள்ளது. இதனால் மற்ற விவசாயிகளும் உத்வேகம் பெற்று விவசாயத்தில், புதிய சிந்தனைகளுடன் செயல்பட்டு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
ஹரியானா அரசு முதலமைச்சர் பிரகதிஷீல் கிசான் சம்மான் யோஜனா (விவசாயி விருது)க்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்த்து வருகிறது. ஹரியானாவில் சுமார் 22 லட்சம் விவசாயிகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. மற்ற மாநிலங்களை விட இங்குள்ள விவசாயிகள் புதிய விவசாய முறைகளை கடைப்பிடிப்பதில் முன்னணியில் உள்ளனர். எனவே, விவசாயிகளின் வருமானத்தில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது, ஹரியானா. இப்போது முற்போக்கு விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் பாரம்பரிய விவசாயம் (Traditional Agriculture) செய்யும் விவசாயிகளையும் விழிப்படையச் செய்ய வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி என்ன? (What is the last date to apply?)
இதுகுறித்து மாநில அரசின் செய்தித் தொடர்பாளர், விருதுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 15ம் தேதி கடைசி நாளாகும் என தெரிவித்தார். நீர் சேமிப்பு, பயிர் கழிவு மேலாண்மை, இயற்கை வேளாண்மை, ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் மற்றும் நிலையான விவசாயம் போன்ற நவீன தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு, இந்த திட்டத்தின் கீழ் வெகுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. விருது பெற்ற விவசாயிகள் மூலம் மற்ற விவசாயிகளும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்திற்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்பதே இந்த முயற்சியாகும்.
விருது வழங்க குழு அமைப்பு (Award organization committee structure)
விருது பெற தங்களை தகுதி உடையவர்கள் என நினைக்கும், முற்போக்கு விவசாயிகள் வேளாண்மைத் துறையின் இணையதளத்தில் (www.agriharyana.gov.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று செய்தித் தொடர்பாளர் அறிவித்தார். இது தொடர்பாக, விவசாயிகள் வேளாண் துறையின் இலவச தொலைபேசி எண்ணை (1800 180 2117) திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார். விருதுகளை தேர்வு செய்ய, மாநில அளவில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் ஜெனரல் மற்றும் மாவட்ட அளவில் துணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. முற்போக்கான விவசாயிகள் கண்டறியப்பட்டு, அவர்கள், மேலும் 10 சக விவசாயிகளை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்ற ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
யாருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? (Who gets how much money?)
மாநில அளவில் முதல் பரிசாக முற்போக்கு விவசாயிக்கு ஐந்து லட்ச ரூபாயும், இரண்டாம் பரிசாக இரண்டு விவசாயிகளுக்கு தலா மூன்று லட்ச ரூபாயும், மூன்றாம் பரிசாக ஐந்து விவசாயிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும். மாவட்ட அளவில் வேளாண்மைத் துறையினரால் விவசாயிகள் கவுரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது. மாவட்ட அளவிலான பிரிவில், 22 மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். இதன் மூலம், மாவட்ட அளவில் ஆறுதல் பரிசாக, 88 விவசாயிகளுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.
மேலும் படிக்க:
PM Kisan FPO திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிப்பது
Jallikattu : பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டா? என்னென்ன கட்டுப்பாடுகள்
Share your comments