1. விவசாய தகவல்கள்

8% மகசூலை அதிகரிக்க உதவும் நானோ யூரியா- விவசாயிகள் கவனத்திற்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Nano urea to help increase yields by 8% - Attention farmers!

நானோ யூரியா திரவ உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் 8 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே விவசாயிகள் இதனைப் பயன்படுத்த முன்வர வேண்டும். 

தழைச்சத்து உரம் (Nutrient compost)

பயிர் நன்றாக வளர மிகவும் முக்கியமான முன்றுச் சத்துகளில் ஒன்று தழைச்சத்து உரமாகும்.
அந்தத் தழைச்சத்து உரமானது இயற்கை வழியில் பசுந்தாள் மற்றும் பசுந்தளை வடிவிலும் செயற்கை முறையில் யூரியா அம்மோனியம் சல்பேட் மற்றும் நைட்ரேட் வடிவில் கிடைக்கிறது.

30 மில்லியன் டன் உரம் (30 million tons of fertilizer)

நமது நாட்டின் விவசாயத் தேவைக்கு, ஆண்டிற்கு 30 மில்லியன் டன் உரம் தேவை படுகிறது.
தற்போது யூரியாவானது குருணை வடிவிலும் வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியா வடிவிலும் விவசாயப் பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது.

நானோ யூரியா (Nano urea)

அதேநேரத்தில் புதிய நானோ டெக்னாலஜி தொழில்நுட்ப படி இஃப்கோ நிறுவனம் திரவ வடிவில் நானோ யூரியாவை தயாரித்து இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது.

விலை ரூ.240 (Price Rs.240)

இந்த திரவ வடிவ நானோ யூரியா 500 மி.லி கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேன்களில் இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு தயாராகத் உள்ளது விலை ரூ.240மட்டுமே.

சிறப்பு அம்சங்கள் (Special Features)

நானோ டெக்னாலஜி படி தயாரிக்கப்பட்ட இந்த நானோ திரவ யூரியாவால் பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்கும். மண்வளம் காக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

ரூ.15,000 மானியம் (Rs.15,000 grant)

தற்போது 1டன் யூரியா விற்கு மத்திய அரசு ரூ.15000 மானியம் வழங்குகிறது. நானோ திரவ யூரியாவால் இந்தப் பெருந்தொகை மிச்சமாகும்.

பயன்படுத்தும் முறைகள் (Methods of use)

நானோ திரவ யூரியாவை இரண்டு முறை பயிருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று இஃப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் தெளிப்பு (First spray)

விதை முளைத்து பிறகு அல்லது 30வது நாளில் நானோ யூரியாவைத் தெளிக்க வேண்டும்.

2-வதுத் தெளிப்பு (2nd spray)

  • பூக்கள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அல்லது முதல் தெளிப்புக்கு 2-3,வார இடைவெளியில் 2-வது முறையாகத் தெளிக்க வேண்டும்.

  • 1லிட்டர் தண்ணீரில் 2-4மிலி நானோ திரவ யூரியாவைக் கலந்து தெளிக்கலாம்.

  • நானோ யூரியாவைப் பயன்படுத்திக்கொள்ள, அது உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருட கால அவகாசம் உள்ளது.

8% மகசூல் அதிகரிக்கும் (Yield increase of 8%)

திரவ யூரியாவை பயன்படுத்துவதால் 8 சதவீதம் பயிர் மகசூல் அதிகரிக்கும்.

பயன்பாடு குறையும் (Usage will down)

நானே திரவ யூரியாவைப் உபயோகிப்பதன் முலம், விவசாயிகள் ஏற்கனவேப் பயன்படுத்திவரும் குருணை வடிவ யூரியாவின் பயன்பாட்டை 50 % வரைக் குறைக்கலாம் என இஃப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல்

அக்ரி. சு.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

9443570289

மேலும் படிக்க...

மண்ணைக் குளிர்விக்கும் கோடை மழை- உழவு செய்தால் கோடி நன்மை!

தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!

English Summary: Nano urea to help increase yields by 8% - Attention farmers! Published on: 16 June 2021, 09:30 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.