ஆல்கஹால் இல்லாத உடலுக்கு ஏற்ற நீரா பானம் தென்னை மரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதனை தென்னை மரங்களில் இருந்து இறக்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம். நீரா என்பது தென்னை பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப் படும் திரவமாகும். இது இனிப்பு சுவையுடன் ஆல்கஹால் இல்லாத உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பானமாகும்.
உரிமம்
மத்திய அரசு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் பதிவு செய்யப்பட்ட தென்னை உற்பத்தி யாளர் கம்பெனிகள் மூலமாக விற்பனை செய்ய முடியும்.
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் நீரா பானம் இறக்குவதற்கு உரிமம் வழங்குவார்.
அவ்வாறு சட்ட பூர்வ உரிமம் பெற்ற பின் தான் நீரா பானத்தை இறக்கி விற்பனை செய்ய முடியும்.
ஒரு தென்னை மரத்தில் நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் நீரா பானம் இறக்க முடியும்.
ஒரு மரத்தில் இருந்து ஆறு மாதங்கள் வரை செய்யும் விதம் தென்னை மரங்களின் மலராதப் பாளைகளில் அரிவாளால் கீறி சாறு வடித்து இயற்கை முறையில் நொதிக்க வைக்காமல் தயாரிக்கப்படுகிறது.நீராவை பதநீர் இறக்குவது போல இறக்க முடியாது. எப்போதும் 5 டிகிரி செல்சியஸ் குளுமையில் வைத்து இருக்க வேண்டும். அதாவது சீவப்பட்ட தென்னை பாளை களில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஜஸ் பெட்டிகளைக் பொருத்தி கட்ட வேண்டும்.
ஐஸ் பெட்டியில் சேகரமாகும் நீராவை இறக்கி பிரிஸர் பொருத்தப்பட்ட வேனில் ஏற்றி கூலிங் சென்டருக்கு அனுப்பி பின் சுத்தப்படுத்தி பாட்டிலில் அடைக்கப்பட வேண்டும்.பின் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு பீரிஸர் பொருத்தப்பட்ட வேன் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இப்பானத்தை பீரிட்ஸ் மூலமாக பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரை இருப்பு வைக்க முடியும். நீரா பானத்தில் இருந்து நீரா வெல்லம், நீரா பாகு சாக்லேட், நீரா கேக், நீரா கூழ் போன்ற மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்ய முடியும்.
இதனால் கிராமபுற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்,
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
94435 70289
மேலும் படிக்க...
Share your comments