1. விவசாய தகவல்கள்

பாதிப்பும் இல்லை..! பக்க விளைவுகளும் இல்லை..! உயிரியல் பூச்சி விரட்டிகளை யூஸ் பண்ணுங்க! - வேளாண்துறை அறிவுறுத்தல்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

இயற்கை உயிரியல் பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், ரசாயன உரம் மற்றும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்கலாம் என வேளாண்துறை அறியுறுத்தியு ள்ளது. விவசாயிகள் இயற்கை உயிரி பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

நவீன வேளாண்மையில், பக்க விளைவுகள் இன்றி பயிர்களின் பூச்சி, நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதில், நுண்ணுயிரி மருந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன. நுண்ணுயிரிகள் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சி விரட்டிகளின் பயன்பாடு பரவலாகும் போது, ரசாயன பூச்சி கொல்லிகளால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து, விளைபொருட்கள் பாதுகாக்கப்படும்.

இயற்கை பூச்சி விரட்டிகளின் பயன்கள்

நுண்ணுயிரி பூச்சி விரட்டிகளின் நன்மைகள் குறித்து, தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறுகையில், உயிரி பூச்சி விரட்டிகள், ரசாயன பூச்சி கொல்லிகள் போல், மண், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளை பாதிப்பதில்லை.

  • அனைத்து வகையான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த, 'வெர்டிசிலியம் லக்கானி' நுண்ணுயிரியை பயன்படுத்தலாம். இந்த நுண்ணுயிரி, பூச்சிகளின் உடம்பினுள் நுழைந்து, இயக்கத்தை முடக்கி, 5 முதல், 7 நாட்களுக்குள் அழித்துவிடும்.

  • காய்துளைப்பாளை கட்டுப்படுத்த, 'பெவேரியா பேசியானா' நுண்ணுயிரியை பயன்படுத்தலாம். இது பூச்சிகளின் செரிமானப்பகுதியை தாக்கி அழிக்கும்.

  • மண் சார்ந்த பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த, ட்ரைகோடெர்மா விரிடி மற்றும் ஹாசனியம் நுண்ணுயிரிகளை பயன்படுத்தலாம். இவை, வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும்.

  • சூடோமோனஸ் பூஞ்சாண கொல்லியாக மட்டுமின்றி, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

  • பயிர்களை தாக்கும் பெரிய வகை புழுக்களை கட்டுப்படுத்த, 'பேசில்ஸ் துருஞ்சியன்சிஸ்' உயிரி பயன்படுகிறது.

  • இவை தவிர, தற்போது அதிக பயன்பாட்டில் உள்ள உயிர் உரங்கள், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரிலம், ரைசோபியம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு அறிமுகம் உள்ளது.

இவை, வேளாண் துறையால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க....

கரும்புப் பயிரில் பஞ்சு அசுவினி நோய் தாக்குதல்! - கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறை விளக்கம்!!

நெற் பயிர்களை தாக்கும் குலை நோய்: அறிகுறிகளும், நோய் மேலாண்மையும்!!

வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிக்கு தேசிய விருது!!

சிறுதானியங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்த பள்ளி மாணவர்கள்!

 

English Summary: No harm ..! No side effects ..! Use biological insect repellents for plant growth Published on: 23 March 2021, 12:58 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.