தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைநிலைக்கல்வியின் 2021 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 83 வயது முதியவர் ஒருவர் வேளாண்மைப் பட்டம் பெற்று அனைவரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்தார்.
பட்டமளிப்பு விழா (Convocation)
தமிழ்நாடு வேளாளர் மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வழியாக நடத்தப்பட்ட முதுநிலை பண்ணைத் தொழில்நுட்பம், பண்ணை அறியிவல் ஆகிய இரண்டாண்டு முதுநிலைப் பட்டப்படிப்பிற்கும், ஓராண்டு பட்டயப்படிப்பான வேளாண்மை இடுபொருள், பண்ணை அறிவியல் ஆகிய இரண்டாண்டு முதுநிலைப் பட்டப்படிப்பிற்கும், ஓராண்டு பட்டயப்படிப்பான வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கும் பட்டம் மற்றும் பட்டயம் வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற 322 மாணவர்களில் 14 மாணவர்கள் வேளாளர் இடுபொருள் பட்டயப்படிப்பிலும், 2 மாணவர்கள் முதுநிலை பண்ணைத் தொழில்நுட்பத்திலும், 2 மாணவர்கள் முதுநிலை பண்ணை அறிவியல் பாடப்பிரிவுகளிலும் முதன்மை மாணவர்களுக்கான பட்டங்களை பெற்றனர்.
துணைவேந்தர் தலைமை உரை (Vice President Speech)
விழாவில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர். முனையர், மு. ஆனந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர், குமார் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
இதில் வங்கதேச BASFன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் N. ஜானகிராம் ராஜா, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் உதவிப் பொதுமேலாளர் மற்றும் இயக்குநரான முனைவர் P.ரெத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
கவனத்தை ஈர்த்த முதியவர் (The attention-grabbing old man)
இந்நிகழ்ச்சியில் 83 வயது முதியவர் பட்டம் பெற்று, அனைவரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்தார். அவருடைய கற்கும் ஆர்வத்தினையும், கல்வி மீது அவர் காட்டிய அக்கரையையும், துணைவேந்தர் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
Share your comments