தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விதை மையம், கோயம்புத்தூர் - 641 003, கட்டணப் பயிற்சி, விதை தரப் பரிசோதனை பற்றிய முழுமையான தகவல், இந்த பதிவில் பார்க்கலாம்.
விதையின் தரத்தை கண்டறிவதற்கான பின்வரும் விதைப் பரிசோதனை முறைகள் குறித்த ஒரு நாள் கட்டணப் பயிற்சி விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பிரதி ஆங்கில மாதம், 10ம் தேதி அளிக்கப்பட உள்ளது. இதில் கீழ்கண்ட விஷயங்கள் உள்ளடங்கும்.
- விதையின் புறத்தூய்மை
- விதை முளைப்புத்திறன் மற்றும் வீரியம்
- விதை நலம்
- துரித முறை விதை பரிசோதனை
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயப் பெருமக்கள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தங்கள் பெயரை கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரடி பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
தொலைபேசி: -422-6611363
கைபேசி: 9710410932/9442210145
பயிற்சி நடைபெறும் இடம்: விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்.
நேரம்: காலை 10 மணி
மேலும் படிக்க: தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க ரூ.25,000 மானியம்! Apply Today
- ஒரு நாள் பயிற்சிக் கட்டணம் - ஒரு நபருக்கு ரூ.750/-
- பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.
- ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும்.
மேலும் தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர் விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் - 641003
விதை தரப் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம்:
- விதை பரிசோதனை ஆய்வு என்பது விதையின் தரங்களான புறத்தூய்மை, ஈர்பபதம், முளைப்புத் திறன் மற்றும் பிற இரக விதைகளின் கலப்பு போன்றவற்றை ஆய்வு செய்து விவசாயிகளுக்க நல்ல தரமான விதைகள் கிடைக்கச்செய்வதே ஆகும்.
- விதையின் தரத்தை கட்டுப்பாடு செய்யும் முக்கிய குவியம் விதை ஆய்வுக்கூடங்கள் ஆகும். கால வரையறைக்குள் விதை ஆய்வை மேற்கொள்வதன் மூலம் விதைக்குவியல்களின் திறனைத் தெரிந்து கொள்ளலாம்.
முக்கியத்துவம்
- விதை ஆய்வின் முக்கியத்துவம் 100 வருடங்களுக்கு முன்பே நடவு செய்யும்பொழுது விதை தரத்தின் முக்கியத்துவம் மூலம் உணரப்பட்டது. இங்கிலாந்தில் மற்றும் சில பகுதிகளில் காய்கறி விதைகளுக்குள் கல்தூசி கலப்படம் செய்து விற்கப்பட்டது.
- பயிர் விளைவித்தலில் ஏற்படும் இடர்களை களைவதற்காகவே விதைத் தரம் கண்டறியும காரணிகளாக தூய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன், வீரியம் மற்றும் நலம் போன்றவற்றை பற்றிய விதை ஆய்வின் விழிப்புணர்வு உணர்த்தப்பட்டது.
சான்று விதையின் தரத்தை நடவு செய்தலின் போது உறுதிப்படுத்துவது. - விற்பனைக்கு தயாராக உள்ள விதைக்குவியலின் தரத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளை உறுதி செய்வது.
இந்தக் காரணிகள், விதை ஈரப்பதம், முளைப்புத் திறன் மற்றும் வீரியம், புறத்தூய்மை மற்றும் இனத்தூய்மை, விதை மூலம் பரவும் நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல் போன்றவை ஆகும். - வணிகத்தில் ஈடுபடும் நிலையில், விதை ஆய்வின் விதிமுறைகளை ஐஎஸ்டிஏ நிறுவனம் (1985) விதித்து, விதை ஆய்வின் கட்டாயத்தை உணர்தியது.
- கீழே விளக்கப்பட்டு விதை ஆய்வு முறைகள் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டது. ஏனெனில் நமது நாட்டின் பயன்பாட்டின் உள்ள விதைகள் (செலாம் et al, 1967) அனைத்தும் தரமான விதையைச் சார்ந்ததே ஆகும். (ஐஎஸ்டிஏ 1996).
- நடவிற்கு வைக்கப்பட்டுள்ள விதைக்குவியல்களிலிருந்து எடுக்கப்படும் விதை மாதிரியே ஆய்விற்கு பயன்படுத்தப்படும். விதைக்குவியலை ஒப்பிடுகையில் விதை மாதிரியான அளவு மிகச் சிறியதே ஆகும்.
மேலும் படிக்க:
28ம் தேதி வரை கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்
Share your comments