இந்தியாவில் 4 சதவீதத்திற்கும் குறைவான விவசாயிகளே நீடித்த வேளான் பண்ணைய முறைகளைப் பின்பற்றி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான ஆய்வு (Interesting study)
ஆற்றல், சூழல் மற்றும் தண்ணீர் கவுன்சில் (CEEEW) இந்த சுவாரஸ்யமான ஆய்வை மேற்கொண்டுள்ளது. உணவு மற்றும் நிலப் பயன்பாட்டு ஒருங்கமைப்பு (FOLL) ஆதரவுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேளான் வருமானத்தை மேம்படுத்தவும், கட்டுப்பாடுகளுடன் கூடிய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் ஊட்டச் சத்து பாதுகாப்பை வலுப்படுத்தவும் நீடித்த வேளாண் பண்ணைய நடைமுறைகள் அவசியம் என இந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கையின் விபரங்கள் (Details of the study report)
ஆந்திரா முன்னிலை (Andhra lead)
நீடித்த வேளாண் பண்ணைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதில் ஆந்திரா மற்றும் சிக்கிம் மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன.
சுற்றுச்சூழல் நன்மை (Environmental benefit)
நீடித்த பண்ணை நடைமுறைகளைப் பின்பற்றுவதால் வருமானம் அதிகரிப்பதோடு, பல்வேறு சுற்றுச்சூழல் நன்மைகளும் கிடைக்கின்றன.
ஊக்கப்படுத்துவதில் கவனம் (Focus on motivation)
அதேநேரத்தில், தற்போதைய வேளாண் நடைமுறைகளை மறுபரிசீலனை ஊக்கப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அடிப்படையில் இருந்து யோசிக்க (Think basically)
வறட்சி நிலவும் பகுதிகளில் இயற்கை வேளாண் நடைமுறைகள் நல்ல பலனைத் தரும்.
உணவுப் பொருள்களை எப்படி விளைவிப்பது மற்றும் எந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நாம், அடிப்படையில் இருந்து யோசிக்க வேண்டும்.
ஆதாரங்களை விரிவுபடுத்தும் (Expanding resources)
நீடித்த பண்ணைய நடைமுறைகள் விவசாயிகளின் உணவு மற்றும் வருமானத்திற்கான ஆதாரங்களை விரிவுபடுத்துவதோடு, சுற்றுச்சூழல் சார்ந்ததாக வேளாண் நடைமுறைகளையும் மாற்றும்.
அத்துடன் இயற்கை வளங்களைச் சரியான அளவில் பயன்படுத்துவதுடன், சுற்றுச் சூழல் அமைப்பை மீட்டெடுக்கவும் உதவும்.
ஈர்ப்பு(Attention)
இடுபொருள்கள் சார்ந்த வேளாண் நடைமுறைகளுக்கு இது ஒரு மாற்றாக இருக்கும். நாட்டில் தற்போது பின்பற்றப்படும் எட்டு நீடித்த வேளாண் பண்ணைய நடைமுறைகளில் இயற்கை வேளாண்மை அதிக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், அதற்கு பட்ஜெட் ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகவும் CEEEW ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நாட்டு ரக விதைகள் வேண்டுமா? - இங்கே இலவசமாகக் கிடைக்கும்!
தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன- வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
Share your comments