1. விவசாய தகவல்கள்

தேனீ வளர்ப்பை முறையாகக் கற்றுக்கொள்ள வாய்ப்பு - ஆன்லைனில் 3 நாள் பயிற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Opportunity to learn beekeeping properly - 3 day training online!

Credit : Niagara College

மதுரை வேளாண் அறிவியல் நிலையமும், தேசியத் தேனீ வாரியமும் இணைந்து நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனீ வளர்ப்பின் தேவை (The need for beekeeping)

விவசாயத்திற்கு இன்றியமையாததாகக் கருதப்படுவது தேனீ வளர்ப்பு. ஏனெனில் இந்தத் தேனீ வளர்ப்பு, மகசூலை அதிகரிக்க அடித்தளம் அமைத்துத் தருகிறது.

சாதக அம்சங்கள் (Pros and cons)

இருப்பினும் எந்த விஷயமானாலும், அதனை முறையாகக் கற்றுக்கொள்வதுதான் காலத்திற்கும் கைகொடுக்கும். அது மட்டுமல்லாமல், ஒரு விஷயத்தைத் தொழிலாகச் செய்யும்போது, அதன் சாதக, பாதக அம்சங்களையும் தெரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகிறது. 

நல்ல லாபம் ஈட்ட (Make good profits)

அந்த வகையில் தேனீ வளர்ப்பு என்பது காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தொழில். இந்தத் தொழிலைச் சிறப்பாகச் செய்து, விவசாயத்தை வளமாக்குவதோடு, நல்ல லாபமும் ஈட்ட நினைப்பவராக நீங்கள்?  அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான். 

பயிற்சி நாள் (Training day)

20.05.21 முதல் 22.05.21 வரை

பயிற்சி நேரம் (Training time)

முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை

பயிற்சியின் தலைப்பு (Title of the training)

தேனீ வளர்ப்பு

இணைப்பு (Link)

காணொளி மூலம் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பின்வரும் லிங்க்-கில் இணையவும்.

https://meet.google.com/ohu-qpvw-jem

பயிற்றுநர்கள் (Instructors)

வேளாண் அறிவியல் நிலைய மற்றும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் மற்றும் தேனீ வளர்ப்பில் வெற்றி கண்ட தொழில் முனைவோர்கள்

இணையவழிச் சான்றிதழ் (e- certificate)

பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு இணையவழிச் சான்றிதழ் (e- certificate) மெயில் மற்றும் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு (For more details)

திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், மதுரை

செல்போன் எண் 

9488448760

மேலும் படிக்க...

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

English Summary: Opportunity to learn beekeeping properly - 3 day training online!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.