1. விவசாய தகவல்கள்

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலேர்ட்- கொட்டப் போகிறது கனமழை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Orange alert for Tamil Nadu - Heavy rain is going to pour!

குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 2 நாட்கள் மிக கனமழை கொட்டக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை மிதமான மழை பெய்யும்.

3.03.22

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மிக கன மழை பெய்யும்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், கன மழை பெய்யக் கூடும்.

4.03.22

கடலுார்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில், கன மழை பெய்யும்.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.வங்க கடலின் தென்கிழக்கு, அந்தமான் பகுதிகளில் இன்றும், தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் மேற்கு, மன்னார் வளைகுடா மற்றும் தமிழககடலோர பகுதிகளில் வரும், 3ம் தேதியும், தென் மேற்கு, தமிழக வடக்கு கடலோரம் மற்றும் ஆந்திராவின் தென்கடலோர பகுதிகளில் வரும், 4ம் தேதியும், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே இந்த நாட்களில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!

English Summary: Orange alert for Tamil Nadu - Heavy rain is going to pour! Published on: 01 March 2022, 10:58 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.