தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு வரும் 4ம் தேதி வரை ஆரஞ்சு அலேர்ட் விடுக்கப்பட்டிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இயங்கை கடலோரப் பகுதி மற்றும் அதவன ஒட்டிய தென் தமிழக கடலோர் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிக்கிறது.
2.11.2021 வரை
மிக கனமழை (Very heavy rain)
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கனமழை (Heavy rain)
இதேப்போல், கன்னியாகுமரி, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
3.11.28. முதல் 4.11.2021 வரை
மிக கனமழை (Very heavy rain)
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும்.
கனமழை (Heavy rain)
ஏனையக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை உட்பட 5 இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வெப்பநிலை (Temperature)
வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
31.10.2021, 01.11.2021
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கைக் கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
31.10.2021 முதல் 03.11.2021 வரை
கேரளக் கடலோரப் பகுதிகள், வட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
04.11.2021
வட்சத்தீவு பகுதிகளில் குறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலார்ட் - 3 நாட்களுக்கு பலத்த மழை!
விளைநிலங்களை உருவாக்க ரெடியா?- ஹெக்டேருக்கு ரூ. 22,800 வரை மானியம்!
Share your comments