1. விவசாய தகவல்கள்

குதிரைவாலி முதல் அகத்திவிதை வரை- ஒரே நாளில் 10 லட்சத்திற்கு மேல் வர்த்தகம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
e-NAM trade center

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (27.12.2023) ஒரே நாளில் ரூ.10,55,689/- க்கு வர்த்தகம் இ-நாம் ஏலம் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் விளைவிக்கும் விளைப்பொருள் இ-நாம் முறையில் விற்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இடைத்தரகர் பிரச்சினைகள் இன்றி, நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதால் இ-நாம் முறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது. அந்தவகையில், இ-நாம் முறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று வர்த்தகம் நடைப்பெற்ற விவரங்கள் பின்வருமாறு-

காளப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 197 குவிண்டால்  குதிரைவாலி ஏலத்திற்கு வந்தது.  அது சென்னை வியாபாரியினால் கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 43.50 க்கு கேட்கப்பட்டது. இதன் மூலம் ரூ.8,56,950/ -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 1176 கிலோ நிலக்கடலை பருப்பு  ஏலத்திற்கு வந்தது. அது சீர்காழி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உட்பட மூன்று வியாபாரிகளால் கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.95-க்கு கேட்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1,11,720/- க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 590.500 கிலோ வரகு ஏலத்திற்கு வந்தது. அது விருதுநகர் வியாபாரியினால் கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.38-க்கு  கேட்கப்பட்டது. இதன் மூலம் ரூ.22,439/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. திருமங்கலத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 84 கிலோ மிளகாய் வத்தல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.200-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.16,800/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 25 கிலோ ஆவாரம்பூ ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.90-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.2250/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. திருமங்கலம் விவசாயியின் 338 கிலோ இருங்கு சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.37-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.12,506/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Read more: தென்காசி மாவட்டத்தில் பயிர்ச்சேதம் எவ்வளவு? அமைச்சர் சொன்ன தகவல்

திருமங்கலம் விவசாயியின் 82 கிலோ வெங்காயம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.32-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.2624/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் மணியகாரன்பட்டியை சேர்ந்த விவசாயியின் 155 கிலோ மல்லி சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.  அது கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் திருப்பூர் நுகர்வோர்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.90-க்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் ரூ.13,950/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் விவசாயியின் 5 கிலோ அகத்தி விதை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.500-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.2500/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.10,55,689-க்கு வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்  விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்கிற எண்ணிலும், மேற்பார்வையாளரை 96008 02823 என்கிற எண்ணிலும், சந்தை பகுப்பாளரை 87543 79755- என்கிற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 

PM kisan திட்டத்தில் இணைய ஜன.15 வரை விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு!

English Summary: Over 10 lakh rupees trade at thirumangalam regulated trading market Published on: 27 December 2023, 04:53 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.